வருமான வரித்துறைக்கு ஷாக் கொடுத்த தல தோனி! – ஜார்கண்ட் மாநிலமே ஆச்சர்யத்தில் மூழ்கியது

0
ராஞ்சி : ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனி, அம்மாநிலத்தில் அதிக வருமான வரியை கட்டிய நபர் என்ற பெருமையை பெற்றுள்ளதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தல தோனி தலைமையில் இந்தியாவுக்கு டி20 உலகக் கோப்பை, ஒருநாள் உலகக் கோப்பை, மினி உலகக் கோப்பை (சாம்பியன்ஸ் டிரோபி) என மூன்று விதமான உலகக் கோப்பைகளை வென்று கொடுத்து இந்தியாவை பெருமைபட வைத்தவர்.

தோனியின் சிறப்பான பேட்டிங், கீப்பிங் மூலம் அனைவரின் மனதிலும் இடம்பிடித்து போட்டியில் மாடுமல்லாமல், பல்வேறு விளம்பரங்கள், விளம்பர தூதர் என்ற பல பதவிகளை பெற்றார்.


தோனி செலுத்திய வருமான வரி:
ஜார்கண்ட் மாநிலத்தில் அதிக வருமான வரியை கட்டிய தனிநபர் என்ற பெருமையை தோனி பெற்றுள்ளார். இவர் 2016-17 நிதி ஆண்டை விட தற்போது 1.24 கோடி அதிகமாக கட்டியுள்ளார்.

2016-17 நிதி ஆண்டில் ரூ. 10.93 கோடியும், 2017-18 நிதி ஆண்டில் 12.17 கோடியும் வருமான வரியாக மட்டும் தோனி கட்டியுள்ளார். இதன் மூலம் கடந்த நிதி ஆண்டில் அதிக வருமான வரியை கட்டிய உத்தரகாண்ட் மாநிலத்தவர் என்ற பெருமையை தோனி பெற்றுள்ளார்.

விமர்சனம் :
இங்கிலாந்து சென்றிருக்கும் இந்திய அணியில் இடம்பெற்ற தோனி டி20, ஒருநாள் போட்டியில் தோனி பேட்டிங்கில் சொதப்பியதால் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளானார். இருப்பினும் சர்வதேச அரங்கில் அதிக கேட்சுகளை பிடித்த விக்கெட் கீப்பர் என்ற பெருமையை தோனி பெற்றார்.

Leave A Reply

Your email address will not be published.