விக்ரமின் துருவ நட்சத்திரத்தை பற்றி நீண்ட நாட்கள் கழித்து வந்த அப்டேட்! மேலும் பல தகவல்கள்

#Vikram
#Gautham Vasudev Menon
#Harris Jayaraj
#Dhruva Natchathiram

சாமி-2வுக்கு அடுத்ததாக விக்ரம் பல படங்களில் நடித்து வருகிறார். அதில் ஒன்று தான் துருவ நட்சத்திரம். கவுதம் மேனன் இயக்குகின்ற இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக விக்ரம் நடித்து வருகிறார். இப்படத்தின் டீசர் எல்லாம் வெளியிடப்பட்ட நிலையில் படப்பிடிப்பை தற்காலிகமாக சில காலம் ஒத்தி வைத்தனர்.இப்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த படத்திலிருந்து நீண்ட நாட்ளுக்கு பிறகு ஒரு அப்டேட் வந்துள்ளது. அதாவது இன்னும் சில நாட்களில் இந்த படத்திற்குரிய சில டீசர்கள் வெளியிடப்பட இருக்கிறதாம்.அது எப்போது வெளியிடப்படும் என்பதற்கான தேதியும் விரைவில் அறிவிக்கப்படுமாம். இது மட்டுமில்லாமல் ஏற்கனவே அறிவித்திருந்த இப்படத்தின் ஒரு மனம் சிங்கிள் டிராக்கும் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்பட உள்ளதாம். இந்த தகவலை இப்படத்தின் இசையமைப்பாளரான ஹாரிஸ் ஜெயராஜ் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.Happy Diwali. This month will see the release of our first single “Oru Manam” from the film Dhruvanatchathiram followed by the album “DEV”. Harris— Harris Jayaraj (@Jharrisjayaraj) November 7, 2018