விஜய்யின் சர்காருக்கு போட்டியாக தீபாவளி ரேஸில் புதியதாக ஒரு படம்! யார் ஹீரோ தெரியுமா?

#Sarkar
#Vijay
#Attakathi Dinesh

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள சர்கார் படம் வருகிற தீபாவளிக்கு ரிலீஸாகவுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இந்த படத்திற்கு போட்டியாக சில படங்கள் வருகின்றன.அதில் முக்கியமானது ஆர்.கே.சுரேஷ் அஜித் ரசிகராக நடித்திருக்கும் பில்லா பாண்டி. மேலும் விஜய் ஆண்டனியின் திமிரு பிடிச்சவனும் ரிலீஸாகுவதாக இருந்தது, ஆனால் சில காரணங்கள் அப்படம் தள்ளிபோனது.இந்நிலையில் இந்த தீபாவளி ரேஸில் புதியதாக தேவயானி, அட்டக்கத்தி தினேஷ், அதிதி மேனன் நடித்துள்ள களவாணி மாப்பிள்ளை படம் ரிலீஸாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.விஜய்யின் சர்கார் போன்ற பெரிய படத்தை எதிர்த்து திரையிட்டாலே நன்றாக ப்ரோமோஷன் ஆகும் என்பது களவாணி மாப்பிள்ளை படக்குழுவின் எண்ணமாக கூட இருக்கலாம்.