விஜய்யின் சர்காரை எதிர்த்த படத்தின் நிலைமை என்ன இப்படியாகிவிட்டது! தளபதி எப்போதும் மாஸ் தான்

#Vijay
#Sarkar
#Vijay Antony

விஜய் நடித்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள சர்கார் படம் வருகிற தீபாவளிக்கு ரிலீஸாகவுள்ளது. இந்த படத்துடன் அஜித் ரசிகராக ஆர்.கே.சுரேஷ் நடித்துள்ள பில்லா பாண்டியும் வெளியாக உள்ளது.முதலில் இவர்களுடன் விஜய் ஆண்டனியும் தனது திமிரு பிடிச்சவன் படத்தையும் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தார். ஆனால் போதிய தியேட்டர் கிடைக்காததால் படத்தின் ரிலீஸை இம்மாத 16ஆம் தேதிக்கு தள்ளி போட்டார்.ஆனால் தற்போது கிடைத்துள்ள தகவலின்படி, திமிரு பிடிச்சவன் படம் இந்த மாதத்தில் ரிலீஸாகாதாம். இம்மாத இறுதியில் ரஜினியின் 2.0 வேறு ரிலீஸாகவுள்ளதால், அடுத்த மாத நடுவிலோ அல்லது இறுதியிலோ தான் ரிலீஸாகுமாம்.இந்த தாமதத்திற்கு விஜய் ஆண்டனியின் முந்தைய படத்தின் தோல்வியினால் விநியோகஸ்தரர்களுக்கு கடன் பாக்கியுள்ளதும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. இந்த பிரச்சனையை தீர்த்த பின்பு தான் படத்தை ரிலீஸ் செய்ய விடுவோம் என அவர்கள் சொல்வதாக செய்திகள் வருகின்றன.