விஜய்யின் சர்கார் கட் அவுட்டை நாங்கள் தான் தூக்கினோம்! தைரியமாக ஒப்புக்கொண்ட தளபதி ரசிகர்களின் வீடியோ

#Vijay
#Vijay Fans
#Sarkar

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள சர்கார் படம் நாளை உலகம் முழுவதும் ரிலீஸாக உள்ளது. இந்த படத்திற்காக தளபதி ரசிகர்களின் கொண்டாட்டங்கள் பல விதங்களில் நடந்து வருகிறது.அதில் ஒன்றாக எந்த ஒரு இந்திய நடிகருக்கும் இல்லாத அளவுக்கு கேரளாவில் தளபதி ரசிகர்கள் மூலம் வைக்கப்பட்ட 175 அடி கட் அவுட் இந்தியா முழுவதும் பிரபலமானது. ஆனால் சர்காரின் முதல் நாள் ஷோ வரை கூட இல்லாதவாறு அந்த கட் அவுட்டை நேற்று கழற்றிவிட்டனர்.ஆனால் இதை மற்ற ரசிகர்கள் தானாகவே அது விழுந்ததாக கூறினர். இந்த விஷயம் காட்டு தீயை போல் பரவியதை அடுத்து அந்த கட் அவுட்டை வைத்த கேரளாவை சேர்ந்த கொல்லம் நண்பன்ஸ் இதற்கு விளக்கம் அளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.அதில், நாங்கள் கட் அவுட் வைத்திருந்த இடம் அதிகம் காற்று வீசும் இடமாக இருந்ததால் மாவட்ட ஆட்சியரின் வேண்டுகோளிற்கு இணங்க மக்களின் பாதுகாப்பை கருதி நாங்களே அதை கழற்றி உள்ளோம். யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என கூறியுள்ளனர்.ഇന്ത്യയിലെ ഏറ്റവും വലിയ കട്ട് ഔട്ട് വെച്ച കൊല്ലം നന്പൻസ് നു ഇല്ലാത്ത വിഷമം ആണല്ലോ അഴിച്ചു മാറ്റിയപ്പോൾ ഇവിടെ ചില പ്രമുഖ ഫാന്സിന് ഉള്ളത് ആസനത്തിൽ ആലുമുളച്ചാൽ അതും ഒരു അലങ്കാരം ആയി നടക്കുന്ന നിങ്ങളോട് ഒന്നേ പറയാനുള്ളു ദീവാലിക്ക് വരേൻ ! @GBK_Official @VijayFreak_ @VijayFansTrends pic.twitter.com/Jnk0N3q7j1— Thalapathy Fans Kerala (@VijayFansKl) November 4, 2018