விஜய்யின் சர்கார் படத்துக்கு தமிழக அமைச்சர் எச்சரிக்கை- கெடுபிடி மேல் கெடுபிடி

#Vijay
#Sarkar

விஜய்யின் சர்கார் படம் பல பிரச்சனைகளை சந்தித்துள்ளது. கதை திருட்டு விவகாரம் இப்படத்தினை அனைவரையும் கவனிக்கப்பட வைத்தது.அதுபோல தற்சமயம் தியேட்டர்களில் அதிக கட்டணம் புகார்களினால் இப்படம் ரிலீஸாகும் தியேட்டர்களுக்கு கெடுபிடி மேல் கெடுபிடி விழுந்த வண்ணம் உள்ளன.தற்போது தமிழக செய்தி தொடர்புத்துறை அமைச்சரான கடம்பூர் ராஜுவும், “பெரிய பட்ஜெட், ஸ்டார் வேல்யூ என்ற காரணம் காட்டி தீபாவளிக்கு வெளியாகும் திரைப்படமாக எதுவாக இருந்தாலும் அதிக கட்டணம் வசூல் செய்தால் அந்த திரையரங்கின் உரிமம் ரத்து செய்யப்படும் என அரசும் அறிவித்துள்ளது.சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையும் தெரிவித்துள்ளது. எனவே, அதிக கட்டணம் வசூலித்தால் தியேட்டர் உரிமத்தை ரத்து செய்வதுடன் கடும் நடவடிக்கையும் எடுக்கப்படும்” என காட்டமாக கோவில்பட்டியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.