விஜய்யின் சர்கார் படத்திற்கு மீனவர்கள் செய்துள்ள காரியத்தை பாருங்க! அதிகரிக்கும் வரவேற்பு

#Vijay
#Sarkar

விஜய் நடித்துள்ள சர்கார் படம் தற்கால அரசியல் நிலவரத்தை தெளிவாக காட்டுவதாக உள்ளது. இதனால் இந்த படத்திற்கு அதிகளவில் ஆதரவு குரல்கள் வந்து கொண்டிருக்கின்றன.இந்நிலையில் மீனவர்களுக்கு ஆதரவாக பேசியிருந்த விஜய்க்கு மீனவர்கள் சார்பில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளனர். அதில், நாட்டின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் மீனவர்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம்.ஆனால் அவற்றை எல்லாம் அரசு பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. எங்களது துன்பங்களை எடுத்து சொல்வதில் திரைப்படங்கள் தான் முக்கிய பங்காற்றுகின்றன. அந்த வகையில் விஜய் நடிப்பில் வெளியான `சர்கார்’ திரைப்படத்தில், விஜய் தான் மீனவன் என்றும் மீனவன் மற்றவர்களுக்கு உதவும் குணம் உள்ளவன் என்றும், நாட்டை காக்க தன் உயிரையும் கொடுப்பான் என்றும் கருத்துகளைக் கூறி மீனவர்களைப் பெருமைப்படுத்துகிறார்.மீனவர்கள் குறித்து நல்ல விதமாகவும், மீனவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளையும் தனது `சர்கார்’ திரைப்படத்தின் மூலம் மக்களுக்கு சொன்ன நடிகர் விஜய், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் தயாரிப்பாளர் கலாநிதி மாறனுக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என கூறப்பட்டுள்ளது.