விஜய்யின் சர்கார் படம் இணையத்தில் கசிந்துவிட்டதா? பரவிவரும் போட்டோவால் பரபரப்பு

#Vijay
#Sarkar
#Vijay Fans

விஜய் நடித்து வரும் சர்கார் வருகிற தீபாவளி நன்னாளில் ரிலீஸாகவுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இந்த படத்திற்காக தான் பல தளபதி ரசிகர்கள் வெறியோடு காத்திருக்கின்றனர்.அதுவும் தமிழக ரசிகர்களை காட்டிலும் கேரள விஜய் ரசிகர்கள் தான் 175 அடியில் மிகப்பெரிய கட் அவுட் எல்லாம் வைத்து அமர்களப்படுத்தி வருகின்றனர். மேலும் இப்படத்தின் டிக்கெட் ரிசர்வேஷனுக்காக நீண்ட வரிசைகளில் இரவு பகல் பாராமல் பல ரசிகர்கள் நின்று கொண்டிருக்கின்றனர்.ஆனால் இவர்களின் அனைவருக்கும் ஷாக் கொடுக்கும்படி சமூக வலைத்தளங்களில் சர்கார் படம் தமிழ் ராக்கர்ஸில் வெளியானது போல் ஒரு போட்டோ சுற்றி வருகிறது. இதை பார்த்த பலரும் படத்தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸை tag செய்து வருகின்றனர்.மேலும் சர்கார் HDயில் வருகிறது என தொடர்ந்து தமிழ்ராக்கர்ஸ் மிரட்டல் விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. #Sarkar HD Print Coming 🔥 🔥 🔥#SarkarPromoOnSunTV #Vijay #Thalapathy #tamilrockers #TR 🔥 #Diwali 🔥— Tamil Rockers (@TamilRockersMV) November 1, 2018