விஜய்யின் சர்கார், பேட்டக்கு பிறகு சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் படம்! இவர்களின் கூட்டணியில் தான்

#Sarkar
#Petta
#Suriya
#Hari

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள சர்கார் படத்தை சன்பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. மேலும் இந்நிறுவனம் ரஜினியின் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிவரும் பேட்ட படத்தையும் தயாரித்து வருகிறது.பொங்கலுக்கு ரிலீஸாகவுள்ள பேட்ட படத்திற்கு பிறகு இந்நிறுவனம் சூர்யா – ஹரி இணையவுள்ள படத்தை தான் தயாரிக்கவுள்ளதாம். தமிழ் சினிமாவில் வெற்றி கூட்டணி எனப்படும் இவர்களது கூட்டணியில் வெளிவந்த சிங்கம் தொடர், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.ஆனால் இந்த படம் சிங்கம் தொடர்ச்சி இல்லையாம். முற்றிலும் மாறுபட்ட கதை. மேலும் இவர்கள் கூட்டணியில் உருவான சிங்கம் முதல் பாகத்தின் திரையிடும் உரிமையை சன்பிக்சர்ஸ் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் NGK, கே.வி.ஆனந்த் படம், பின் சுதா கோங்குரா இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்கிறார். இதையெல்லாம் முடித்து, அடுத்த வருடம் தான் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்குமாம்.