விஜய் சர்கார் படத்தை பார்த்த பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் என்ன கூறியுள்ளார் தெரியுமா? ட்வீட் இதோ

#Vijay
#Sarkar

சர்கார் படம் விஜய் நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் தற்கால அரசியல்வாதிகளுக்கு தக்க பதிலடியாக இருக்கிறது என கூறப்படுகிறது.இதனால் இப்படத்திற்கு ரசிகர்களையும் தாண்டி திரையுலக பிரபலங்களும் நல்ல வரவேற்பு அளித்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் இப்படத்தை வாழ்த்தியுள்ளார்.இதோ அவருடைய தீபாவளி வாழ்த்து மற்றும் விஜய்யின் சர்கார் பட டுவிட் பதிவு,#தீபாவளி திருநாள் வாழ்த்துகள் தமிழ் உறவுகளே.புத்தாடையுடன் புன்னகையும் இனிப்புடன் மகிழ்ச்சியும் பரிமாறும் முன்னே சரவெடியோடு ஆரம்பமாகும் #தீபஒளி ஆனந்தம்.செந்தமிழ் தரணியெங்கும் #விவசாயம் செழிக்கட்டும்,சர்க்கரை தமிழோடு இளைய தளபதி #சர்கார் படமும் சேர்ந்தே ஒலிக்கட்டும் #HappyDeepavali— Harbhajan Turbanator (@harbhajan_singh) November 6, 2018