விஜய் சேதிபதியின் 96 படம் இதுவரை இத்தனை கோடிகளை வசூல் செய்துள்ளதா!

#Vijay Sethupathi
#Trisha
#96 Movie
#Box Office

விஜய்சேதுபதி, திரிஷா நடிப்பில் இந்த மாத துவக்கத்தில் வெளியாகி இருந்த படம் 96. அறிமுக இயக்குனரான பிரேம் குமார் இயக்கியிருந்தார்.அனைவரது பள்ளி பருவத்து காலத்தையும் அதில் கடந்து போன காதலையும் இப்படம் சொல்லியிருந்ததால் ரசிகர்களிடையே சக்கைபோடு போட்டது.50வது நாட்களை நோக்கி ஓடி கொண்டிருக்கும் இப்படம் இதுவரை மட்டும் ஒட்டுமொத்தமாக 50 கோடிகளுக்கு மேல் வசூலை ஈட்டியுள்ளது.மேலும் இப்படம் பிபோர் சன்ரைஸ் என்ற ஆங்கில படத்தின் தழுவல் என்றும் பாரதிராஜாவின் உதவி இயக்குனரான சுரேஷ் சத்ரியன் எழுதிய 92 என்ற கதையின் காப்பி தான் 96 என்ற சர்ச்சையும் உலா வந்தது குறிப்பிடத்தக்கது.