விஜய் தான் அடுத்த சூப்பர்ஸ்டார்.. நான் அப்போவே சொன்னேன்: பிரபல இயக்குனர்

#Vikraman
#Vijay

அடுத்த சூப்பர்ஸ்டார் யார் என்கிற பேச்சு நீண்ட நாட்களாக தமிழ் சினிமாவில் உள்ளது. அதற்காக விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் இடையே சண்டையும் இணையத்தில் நடக்கும்.இந்நிலையில் விஜய் தான் அடுத்த சூப்பர்ஸ்டார் என தான் கூறியதாக பிரபல இயக்குனர் விக்ரமன் பேசியுள்ளார். விஜய் நடித்த பூவே உனக்காக படத்தை இயக்கிவர் அவர்.அந்த படத்தின் ஷூட்டிங்கில் விஜய் சண்டை காட்சிக்கு கூட டூப் பயன்படுத்தமாட்டாராம். மேலும் ஷூட்டிங் துவங்கும் முன்பு ஒன்றரை மணி நேரம் முன்பே வந்து டப்பிங் பேசி முடிந்துவிடுவாராம்.இதையெல்லாம் பார்த்துவிட்டு விஜய்யின் அப்பா அம்மாவிடம் ‘விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டாரா வருவாரு பாருங்க’ என சொன்னாராம் விக்ரமன்.