விஜய் படத்தை மட்டும் ஏன் கொண்டாடுகிறீர்கள், பிரபல இயக்குனர் தாக்கு

#Vijay
#Vijay Fans

தளபதி விஜய் மிகப்பெரும் ரசிகர்கள் வட்டத்தை கொண்ட நடிகர். இவர் நடிப்பில் கடந்த தீபாவளிக்கு சர்கார் படம் திரைக்கு வந்தது.இப்படம் கேரளாவில் முதல் நாள் ரூ 6 கோடி வரை வசூல் செய்து ஆல் டைம் நம்பர் 1 ஓப்பனிங் என்ற சாதனையை படைத்தது.இந்நிலையில் கேரளாவின் சூப்பர் ஸ்டார் என்றால் மோகன் லால் தான், இவர் நடிப்பில் நேற்று ஒடியன் படம் திரைக்கு வந்துள்ளது.இப்படம் ரசிகர்களிடம் மிகவும் மோசமான விமர்சனங்களை பெற்று வருகின்றது, இதுக்குறித்து இப்படத்தின் இயக்குனர் ஷிவ்குமார் கடுமையான கருத்து ஒன்றை கூறியுள்ளார்.இதில் ‘நமது படம் இவ்வளவு வசூல் வந்துள்ளது என்று சொன்னால், அதை கொண்டாடாமல் கிண்டல் செய்கிறீர்கள்.ஆனால், விஜய் படத்தை இங்கே தலையில் தூக்கி பேசி வருகிறீகள், முதலில் நம் படத்தை ஊக்கப்படுத்துங்கள்’ என்று கூறியுள்ளது, இது கேரளா விஜய் ரசிகர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.