விஜய் ரசிகர்களின் சர்கார் கொண்டாட்டத்திற்கு நடுவில் வந்த விஸ்வாசம் பட சூப்பர் அப்டேட்

#Viswasam

கடந்த சில மாதங்களாகவே விஜய்யின் சர்கார் பட கொண்டாட்டங்கள் தான் அதிகம். எங்கு திரும்பினாலும் விஜய் பற்றியும் அவரது படம் பற்றிய பேச்சு தான்.பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்த சர்கார் படமும் ரிலீஸ் ஆகிவிட்டது, விமர்சனங்கள் எல்லாம் கலவையாக வருகின்றன. ஆனாலும் பாக்ஸ் ஆபிஸில் எந்த குறையும் இருக்காது என கூறப்படுகிறது.இதற்கு நடுவில் அஜித் ரசிகர்களுக்காக விஸ்வாசம் பட அப்டேட் வந்துள்ளது. படத்திற்கான படப்பிடிப்பு வேலைகளை அஜித் இந்த 8ம் தேதியோடு முடிக்க இருக்கிறாராம். டப்பிங் வேலைகள் முடிந்துவிட்டது, சில சின்ன சண்டை காட்சிகள் மட்டும் இந்த படமாக்கப்பட இருக்கிறது.அதோடு மொத்த விஸ்வாசம் பட படப்பிடிப்பும் இந்த ஞாயிற்றுக்கிழமையோடு முடிகிறதாம்.