விஜய் ஹசாரேவில் மிரட்ட வருகிறார்… மும்பை ‘டான்’ ரோகித்!

இந்தியாவில் ஆண்டுதோறும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே டிராபி தொடர் நடத்தப்படுவது வழக்கம். இதன் லீக் சுற்று போட்டிகள் வரும் 11ம் தேதி முடிந்து, ‘நாக்- அவுட்’ சுற்று போட்டிகள் வரும் 14ம் துவங்கவுள்ளது.

‘நாக்- அவுட்’ சுற்று:
இந்நிலையில் பெங்களூருவில் நடக்கும் ‘நாக்- அவுட்’ போட்டியில் மும்பை அணிக்காக ரோகித் சர்மா பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 14ம் தேதி நடக்கவுள்ள காலிறுதியில், மும்பை அணி, பீஹார் அணியை அதிர்கொள்ளவுள்ளது.

இதில் வெல்லும் பட்சத்தில் 17ல் நடக்கவுள்ள அரையிறுதிக்கு மும்பை அணி செல்லும். அதில் வென்றால் 20ல் நடக்கும் ஃபைனலுக்கு அந்த அணி முன்னேறும்.

விண்டீஸ் தொடர்…..
இந்நிலையில் இதில் 1 அல்லது 2 போட்டிகளில் ரோகித் சர்மா பங்கேற்பார் என மும்பை அணி தேர்வுக்குழு தெரிவித்துள்ளது. விண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள், டி-20 கிரிக்கெட் தொடருக்காக பயிற்சியாக ரோகித் சர்மா விஜய் ஹசாரே டிராபி தொடரில் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.