விண்வெளியிலும் கால்பதித்த பார்பி பொம்மைக்கு இன்று 60-வது பிறந்த நாள்!

உலகம் முழுவதும் குழந்தைகளிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற பார்பி பொம்மைக்கு இன்று எத்தனையாவது பிறந்த நாள் தெரியுமா? அது தெரிந்தால் மிகவும் ஆச்சர்யப்படுவீர்கள்.

Barbara Millicent Robert-க்கு இன்று60வது பிறந்த நாள். அவளின் முழுப்பெயரை கூறினால் உங்களுக்கு யார் என்று தெரியாது அல்லவா… அவள் பெயர் பார்பி… ஆம் உலகம் முழுவதும் உள்ள குழந்தைகளின் உற்ற தோழியாய் மாறிப்போன பார்பி பொம்மைக்கு இது 60-வது பிறந்த நாள்.1959-ம் ஆண்டில் இதே நாளில்தான் அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள பொம்மை திருவிழாவில் பார்பி முதல் முதலில் அறிமுகமானது.

அம்மாவாக பார்பி

இதனை வடிவமைத்த Ruth Handler’s தனது மகள் பார்பராவின் பெயரையே அந்த பொம்மைக்கு சூட்டினார். அன்று முதல் இன்றுவரை ரோபோ இன்ஜினியர், பத்திரிகையாளர், விண்வெளி வீரர் என இந்த பார்பி பெண் 200 அவதாரங்கள் எடுத்து உலகம் முழுவதும் பயணித்து வருகிறாள்.

பல நாடுகளில் அந்த நாட்டின் இனம், மொழிக்கு ஏற்ப தனது வடிவமைப்பை மாற்றிக் கொள்வதால் பார்பி மூதாட்டியான வயதிலும் இளம்பெண்ணாகவே இருக்கிறார். நிலவில் முதல்முறையாக மனிதன் காலடி எடுத்து வைக்கும் முன்பே விண்வெளிக்குச் சென்று வந்த பெருமை கூட இந்த பார்பிக்கு உண்டு.

அழகிய பார்பிLoading… இவ்வளவு காலமும் உலகம் முழுவதும் உள்ள கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் பார்பியை வடிவமைத்துள்ளோம். இன்னும் 60 ஆண்டுகளுக்கு நிலைத்திருக்கும் திறமை பார்பிக்கு இருக்கிறது என நினைக்கிறேன்.

பலவிதமான வேடங்களில் பார்பி

அனிமேஷன் திரைப்படம், தொலைக்காட்சித் தொடர், வீடியோ கேம் என எந்த வடிவத்தில் பார்பி வந்தாலும் உலகமே இரு கை கூப்பி வரவேற்று அள்ளி அரவணைத்துக் கொள்கிறது.

உண்மையான பெண்ணைப் போல் இல்லை, இதில் இருந்து வெளிவரும் நச்சு வாயு ஆபத்தானது என பல சர்ச்சைகள் பார்பியை சுற்றி வந்தாலும் 60 ஆண்டுகளாக ஒரு பெண்ணாய் இந்த உலகத்தில் வெற்றிக் கொடி நாட்டியிருப்பது சாதாரண காரியமல்ல அல்லவா.

Also see… தமிழகத்துக்கு 4 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் – கேபினட் ஒப்புதல்

பெண்ணாக இருந்து ஆணாக மாறிய திருநம்பிக்கு பிறந்த ஆண் குழந்தை!