வீட்டில் இருக்கும் இந்த பொருட்கள் காற்றின் தரத்தை குறைத்து உங்களுக்கு நுரையீரள் கோளாறை ஏற்படுத்தும்.

0

போல்ட் ஸ்கை தமிழ் உடல்நலம் Wellness வீட்டில் இருக்கும் இந்த பொருட்கள் காற்றின் தரத்தை குறைத்து உங்களுக்கு நுரையீரள் கோளாறை ஏற்படுத்தும். Wellness oi-Saran Raj By Saran Raj |

Updated: Friday, May 17, 2019, 17:10 [IST]
மனிதர்கள் உயிர்வாழ மிகவும் அவசியமானது எதுவேனில் அது காற்றுதான். அதற்கு பிறகுதான் நீர், உணவு எல்லாம். நமது ஆரோக்கியதிற்கும் நமது சுற்றுப்புறத்தில் இருக்கும் காற்றின் தரம் மிகவும் அவசியமானதாகும். நமது உடலில் இருக்கும் உறுப்புகள் சரியாக இயங்க அவற்றிக்கு காற்றும் அவசியமாகும். ஆனால் இன்று நம்மை சுற்றியிருக்கும் காற்றின் தரம் என்பது மிகவும் கீழ்நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. நச்சை கக்கும் தொழிற்சாலைகள், அதிகரித்து வரும் வாகனங்கள் என அனைத்தும் நமது சுற்றுசூழலை மோசமாக்கி கொண்டே வருகிறது. இந்த சூழ்நிலையில் நமது வீட்டில் இருக்கும் சில பொருட்கள் கூட நம்மை சுற்றியிருக்கும் காற்றின் தரத்தை குறைக்கும். இந்த பதிவில் வீட்டில் இருக்கும் எந்தெந்த பொருட்கள் காற்றின் தரத்தை மோசமாக்கும் என்று பார்க்கலாம். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் பெயிண்ட் வீட்டிற்கு பெயிண்ட் அடித்தவுடன் மீதமிருக்கும் பெயிண்ட் அல்லது காலியான டப்பா போன்றவற்றை வீட்டிலேயே போட்டு வைத்திருப்போம். இந்த கேன்கள் VOC என்னும் நச்சு வாயுவை வெளியிடும். இது உங்கள் வீட்டிற்குள் உள்ளேயும், வெளியேயும் இருக்கும் காற்றின் தரத்தை பாதிக்கும், இதனால் மூச்சுக்கோளாறுகள் ஏற்படும். அதிகளவு VOC வாயு புற்றுநோயை கூட ஏற்படுத்தும். ஏரோசல் பர்ப்யூம்கள் சிலசமயம் உங்கள் வீட்டில் இருக்கும் பொருட்கள் உட்புறம் மட்டுமின்றி வெளிப்புறத்தில் இருக்கும் காற்றையும் பாதிக்கக்கூடும். உங்களின் தனிப்பட்ட தேவைகளுக்காக பயன்படுத்தும் ஏரோசல் பர்ப்யூம்கள் வெளிப்புற காற்றின் VOC அளவை அதிகரிக்கும். இதன் பயன்பாட்டை குறைப்பதுதான் உங்களுக்கு நல்லது. சுத்தப்படுத்தும் பொருட்கள் உங்கள் வீடு சுத்தமாகவும், வாசனையாகவும் இருக்க வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு இருக்கத்தான் செய்யும். ஆனால் அதற்கு நீங்கள் பயன்படுத்தும் பொருட்கள் அதிகளவு VOC வாயுவை வெளியிடும். இதனால் ஏற்படும் தீமைகளை குறைக்க அதிக வாசனையில்லாஹ பொருட்களை பயன்படுத்தவும், மேலும் தண்ணீர், வினிகர் போன்ற சாதாரண பொருட்களின் பயன்பாட்டை அதிகரிக்கவும். இது உங்கள் வீட்டிற்குள் இருக்கும் காற்றின் தரத்தை பாதிக்காது. MOST READ: உங்கள் உடலிலேயே மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா? சத்தியமா நீங்க நினைக்கிற இடம் இல்ல…! மெழுகுவர்த்திகள் இதன் மணமும், சூழ்நிலையை ரம்மியமாக மாற்றலாம், ஆனால் இவை பல பிரச்சினைகளையும் சேர்த்தே வெளியிடுகிறது. இதில் இருக்கும் மூலக்கூறுகளும், துகள்களும் காற்றின் தரத்தை பாதிப்பதுடன் நுரையீரல் தொடர்பான பிரச்சினைகளையும் ஏற்படுத்துகிறது. ஏர் பிரஷ்னர்கள் வீடு வாசனையாக இருக்க வேண்டுமென்று ஏர் பிரஷ்னர்கள் உபயோகிக்கும் பழக்கம் இன்று பலருக்கும் இருக்கிறது. இவை நூற்றுக்கும் மேற்பட்ட இரசாயனங்களை வெளியிடுகிறது. அவற்றில் சில உங்கள் வீட்டின் காற்றில் மாசை உண்டாக்கக்கூடும். இதனால் ஆஸ்துமா, மூச்சு கோளாறுகள் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். கிரானைட் கிரானைட் கற்கள் இயற்கையாகவே ரேடான் என்னும் கதிரியக்க வாயுவை வெளியிடும். நுரையீரலை பாதிப்பதில் இதுதான் இரண்டாவது ஆபத்தான வாயுவாகும். ஆனால் வீட்டில் இருக்கும் கிரானைட் கற்கள் இதனை வெளியிடாது என்றார் ஆய்வுகள் கூறுகிறது. ஆனால் உடைந்த மற்றும் சிதைந்த கிரானைட் கற்கள் இதனை வெளியிடும். எனவே உடைந்த கிரானைட் கற்கள் இருந்தால் அதனை உடனடியாக அப்புறப்படுத்தவும். MOST READ: நீங்க அடுத்த ஜென்மத்துல ஆணா பிறப்பீங்களா இல்ல பொண்ணா பிறப்பீங்களானு தெரிஞ்சிக்கிறது எப்படி? மரம் எரிக்கும் இடம் நெருப்பு கொளுத்தவுது வீட்டிற்குள் உற்சாகத்தை கொண்டுவரலாம். ஆனால் இது சுற்றுப்புறத்தை பாதிக்கக்கூடும். மரம் எரித்து குளிர்காய்வது, அதன் சாம்பலை அப்புறப்படுத்துவது போன்றவை உங்கள் வீட்டில் அதிக காற்று மாசுபாட்டையும், காற்றில் கார்பன் மோனாக்ஸைடின் அளவையும் அதிகரிக்கும். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
GET THE BEST BOLDSKY STORIES!

Allow Notifications
You have already subscribed Comments

Leave A Reply

Your email address will not be published.