வெள்ளை மாளிகையில் சி.என்.என். செய்தியாளருடன் அதிபர் டிரம்ப் வாக்குவாதம்

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது டிரம்ப்-க்கும் சிஎன்என் செய்தியாளர் ஜிம் காஸ்டாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மற்ற செய்தியாளர்களிடம் அதிபர் டிரம்ப் கடுமையாக நடந்து கொண்டார். லத்தீன் அமெரிக்காவிலிருந்து வரும் அகதிகள் குறித்த கேள்வியால் செய்தியாளருக்கும் அதிபருக்கும் இடையேயான வாக்குவாதம் தொடங்கியது.

இந்த வாக்குவாதங்களை தொடர்ந்து, அதிபரின் செய்தியாளர் சந்ததிப்புகளுக்கு ஜிம் காஸ்டாவுக்கு  அளிக்கப்பட்டு வந்த அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் வெள்ளை மாளிகை செயலாளர் சாரா சண்டர்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜிம் காஸ்டாவை தடுக்க முயன்ற வெள்ளை மாளிகை பெண் ஊழியர் மீது கை வைத்ததாக குற்றம்சாட்டியுள்ளார். செய்தியாளர் ஜிம் காஸ்டாவுடன் அதிபர் டிரம்ப் வாக்குவாதம்

WHCA statement on White House decision on credentials. pic.twitter.com/bukK7CGu2G
— WHCA (@whca) November 8, 2018

Loading…

இதனை மறுத்துள்ள ஜிம் காஸ்டா, தன் கையிலிருந்து மைக்கை பறிக்க முயன்ற ஊழியரை தடுத்ததாக தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள சிஎன்என் நிறுவனம், ஊடகங்கள் மீதான அதிபரின் தாக்குதல்கள் அதிகரித்து வருவதாக கூறியுள்ளது. இவை ஆபத்தானவை மட்டுமல்ல, அமெரிக்காவின் பழக்கமும் அல்ல எனவும் கூறியுள்ளது.

I’ve just been denied entrance to the WH. Secret Service just informed me I cannot enter the WH grounds for my 8pm hit
— Jim Acosta (@Acosta) November 8, 2018

President Trump believes in a free press and expects and welcomes tough questions of him and his Administration. We will, however, never tolerate a reporter placing his hands on a young woman just trying to do her job as a White House intern…
— Sarah Sanders (@PressSec) November 8, 2018

This is a lie. https://t.co/FastFfWych
— Jim Acosta (@Acosta) November 8, 2018

சுதந்திரமான ஊடகங்களை அதிபர் மதிப்பதில்லை என்பது  வெளிப்படையாக தெரிந்தாலும், தான் பதவியேற்ற போது அளித்த உறுதி மொழியை பாதுகாக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.  சுதந்திரமான ஊடகம் ஜனநாயகத்தின் மூச்சு என்றும், தங்கள் நிறுவனத்தின் செய்தியாளர் ஜிம் காஸ்டாவுடன் துணை நிற்போம் என்றும் சிஎன்என் பதிவிட்டுள்ளது.

We stand by our decision to revoke this individual’s hard pass. We will not tolerate the inappropriate behavior clearly documented in this video. pic.twitter.com/T8X1Ng912y
— Sarah Sanders (@PressSec) November 8, 2018

Also see…