வேலை நிறுத்தத்துக்கு அரசு ஊழியர் சங்கங்கள் ஆதரவு – தலைமைச் செயலாளர் எச்சரிக்கை

வங்கி மற்றும் மத்திய அரசு ஊழியர்கள் ஜனவரி 8 மற்றும் 9-ம் தேதி தேசிய அளவிலான வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.

மத்திய அரசு ஊழியர்கள் விரோதக் கொள்கையுடன் செயல்பட்டு வருவதை நிறுத்த வேண்டும் என்ற வங்கி ஊழியர்கள் சங்கங்கள் ஜனவரி 8 மற்றும் 9-ம் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாகச் சென்ற வாரம் அறிவித்தனர்.வங்கி ஊழியர்கள் சங்கங்களின் போராட்டத்திற்கு மத்திய அரசு ஊழியர்கள் சங்கங்களும் ஆதரவு அளித்து நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுப்படப் போவதாகத் தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்துத் தமிழ் நாடு அரசு ஊழியர்கள் சங்கங்களும் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடப்பட உள்ளதாகக் கூறியுள்ளனர்.

“தமிழக அரசு ஊழியர்கள் வரும் 8,9 தேதிகளில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஒப்பந்த ஊழியர்கள் விடுப்பு எடுத்தால் பணியிலிருந்து நீக்கப்படுவார்கள்.

அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் அன்று விடுப்பு எடுக்கக் கூடாது. மீறினால் ஊதியம் பிடிக்கப்படும்” என்று தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் கூறியுள்ளார்.

மறுபக்கம் அரசு ஊழியர்களுடன் இணைந்து நாடு தழுவிய நிறுத்தப் போராட்டத்தில் விவசாயிகளும் பங்கேற்க உள்ளனர்.Loading… மேலும் படிக்க: ஜெயலலிதா மரணத்திற்கு காரணம் தினகரன் குடும்பத்தினர் தான்: சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு