ஸாரிடான் மாத்திரை மீது ஏற்பட்ட தடை! என்னென்ன மாத்திரைகள் தடை செய்யப்பட்டன?

நமது அரசாங்கம் 349 மருந்து மாத்திரைகளின் மீது தடை உத்தரவு பிறப்பித்து உள்ளது. நம் அரசின் சுகாதார துறை வாயிலாக இரண்டு – மூன்று ஆண்டுகள் தகுந்த பரிசோதனை நடத்தி, அதன் பின் எடுக்கப்பட்ட முடிவு தான் இது என்று கூறப்படுகிறது. ஸாரிடான் என்பது ஒரு வலி நிவாரணி மாத்திரை. இதனை அரசு தடை செய்து விட்டதாக பல தரப்பில் இருந்தும் செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன. இது திடீர் தடையா? இந்த மாத்திரையை தடை செய்ய என்ன கரணம் என்று இந்த பதிப்பில் படித்து அறிவோம்! பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் ஸாரிடான் மாத்திரை! ஸாரிடான் மாத்திரையை பொதுவாக காய்ச்சல், தலைவலி போன்ற சிறு சிறு பிரச்சனைகளுக்கு பயன்படுத்துவர், நம் மக்கள். இந்த மாத்திரையை எந்த ஒரு மருத்துவரின் குறிப்பு சீட்டு இல்லாமலே கூட கடைகளில் இருந்து பெற முடியும். சாதாரண தலைவலி, காய்ச்சல் போன்றவற்றிக்கான மாத்திரைகளை நாம் மருந்தகங்களில் இருந்து வெறும் வாயாலேயே கேட்டு பெறுவது போல, இந்த மருந்தையும் வாங்கலாம். பக்க விளைவு ஏற்படுமா? ஸாரிடான் மாத்திரையால், பெரிய அளவுக்கு எந்த ஒரு பக்க விளைவும் ஏற்படாது; ஆனால், உடலில் ஸாரிடான் ஒத்துக் கொள்ளாத நிலை இருந்து, அதை அறியாமல் அல்லது அதையும் மீறி இந்த மருந்தை பயன்படுத்தினால், கண்டிப்பாக பெரிய அபாயங்கள் ஏற்படலாம். இந்த மாத்திரை பயன்படுத்துவதால் ஏற்படும் பக்க விளைவுகளாக அறியப்படுவன: ஒவ்வாமை, குமட்டல், வாந்தி, காய்ச்சல், வாயுத் தொல்லை, பலவீனம், இரத்தசோகை போன்றவை ஆகும். எப்பொழுது தவிர்க்க வேண்டும்? இந்த ஸாரிடான் மாத்திரையை உடலில் அலர்ஜி பிரச்சனை, கல்லீரல் கோளாறு, சிறுநீரக கோளாறு இருந்தால் தவிர்த்து விடுவது நல்லது; மேலும் இந்த மாத்திரையை தசை வலி, உடல் வலி, மாதவிடாய், எலும்புகளில் ஏற்பட்ட கோளாறு போன்ற பிரச்சனைகளுக்காக உட்கொண்ட நேரத்தில், உடலில் கருப்பு நிற சிறுநீர், மலம், மஞ்சள் காமாலை, ஒவ்வாமை போன்ற குறைபாடுகள் ஏற்பட்டால் உடனே மாத்திரைகள் எடுத்துக் கொள்வதை நிறுத்தி விட வேண்டும். ஏன் தடை விதித்தனர்? அதிக பட்ச பக்க விளைவுகள் இல்லை எனும் பொழுது ஏன் அரசு இந்த மாத்திரைக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கேள்வி உங்கள் மனதில் எழுகிறதா? இந்த மருந்தை தனித்து உட்கொண்டால் பிரச்சனை குறைவு என்று கூறலாம். ஆனால், சந்தையில் FDC என்ற முறையில் மாத்திரைகள் விற்கப்படுவதால், அதற்கேற்ற தயாரிப்பு முறையும் மாத்திரைகளில் மேற்கொள்ளப்படுவதால் தான் இந்த மாத்திரைகளை அரசு தடை செய்தது. FDC என்றால் என்ன? FDC என்பது பிக்சிடு டிரக் காம்பினேஷன் என்று பொருள்; இதனை நிரந்தரமான மாத்திரை கூட்டணி என்று கூறலாம். அதாவது ஸாரிடான் என்ற மாத்திரை உட்கொண்டால், அதனை தனித்து எடுத்துக் கொள்ளாமல், அதனுடன் வேறு சில மாத்திரைகளை கட்டாயம் சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற நிலை ஏற்பட்டு விட்டது. இந்த கூட்டு மாத்திரைகள், கூட்டணி அமைத்து மனித உயிர்களை கொள்ளை கொண்டு போகும் தன்மை உடைவை என்று கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. FDC மாத்திரைகள்! Cefixime + Azithromycin, Ofloxacin + Ornidazole Suspension, Metronidazole + Norfloxacin, and Paracetamol + Propyphenazone + Caffeine (trade name Saridon) என்ற வகையில் மாத்திரைகளில் கூட்டணி வகுக்க படுகின்றன. இந்த மாத்திரை காம்பினேஷன்கள் பெரும்பாலான மக்கள் அனைவரும் அறிந்த ஒன்றாகும். இந்த கூட்டணியை உடைக்க தான் அரசு 369 மாத்திரைகளை தடை விதிக்க வேண்டும் என்று இரண்டு – மூன்று ஆண்டுகளுக்கு முன்பே தீர்மானித்தது. தடை செய்யப்பட்ட மாத்திரைகள்! அந்த தீர்மானத்தின் படி, நேற்று 349 மாத்திரைகள் தடை செய்யப்பட்டு விட்டதாக அறிக்கை வெளியானது. அதன் படி வெளியான பட்டியலில் வலி நிவாரணி Saridon, the skin cream Panderm, combination diabetes drug Gluconorm PG, antibiotic Lupidiclox and antibacterial Taxim AZ போன்ற பிரபல மருந்துகள் தடை செய்யப்பட்டு விட்டன. இது தவிர மற்ற மாத்திரைகளும் உள்ளன; ஆனால், இந்த மாத்திரைகள் பெரும்பாலுமான மக்களால் அன்றாடம் உபயோகிக்க பட்டவை! தப்பிப்போன மாத்திரைகள்! அரசாங்கத்தின் இந்த தடை உத்தரவில், Corex மற்றும் D-Cold போன்ற மாத்திரைகள் விட்டுப்போனதாக, தப்பித்து விட்டதாக கேள்வி! இது போன்ற தப்பிப்போன மாத்திரைகள் எத்தனையோ?! எந்த மாத்திரை தடையானால் என்ன, தப்பி போனால் என்ன – நண்பர்களே! இனி வரும் நாட்களில் ஆவது இந்த அல்லோபதி மருந்துகளை பயன்படுத்தி அல்லல் படாமல், வீட்டு வைத்தியம் மற்றும் நம் பாரம்பரிய முறை என்று நமது வாழ்க்கை முறையை மாற்றி ஆரோக்கியமாக வாழ முயல்வோமாக! பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published.