ஸ்மித், வார்னர் வாங்கிய தண்டனையை பார்த்தும் திருந்தாத சண்டிமல் – பெரிய தண்டனை காத்திருக்கு

0
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் போது பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில், இலங்கை கேப்டன் தினேஷ் சண்டிமல் 3வது டெஸ்ட் போட்டி விளையாடாததோடு,பெரிய தண்டனை காத்திருக்கிறது.

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டியில் விண்டீஸ் அணி 226 ரன் வித்தியாசத்திலும்,2வது போட்டி டிராவிலும் முடிவடைந்தது.

பந்தை சேதப்படுத்திய சண்டிமல்:
2வது டெஸ்ட் 3வது நாள் ஆட்டத்தின் போது பந்து சேதமாகியுள்ளது,புதிய பந்து கொடுத்தால் தான் விளையாடுவோம் என இலங்கை அணி கேப்டன் தினேஷ் சண்டிமல் அடம்பிடித்தார்.

இந்நிலையில் பந்து எப்படி சேதமானது என போட்டி நடுவர்கள் ஆராய்ந்தனர். இதில் இலங்கை கேப்டன் தினேஷ் சண்டிமல் செயற்கை திரவம் வைத்து பந்தை சேதப்படுத்தியது தெரியவந்தது.என்ன தண்டனை :
இந்நிலையில் தான் குற்றமற்றவர் என சண்டிமலும், இலங்கை கிரிக்கெட் நிர்வாகமும் ஐசிசி., யிடம் தெரிவித்தனர். ஆனால் இதை ஏற்க மறுத்த ஐசிசி சண்டிமல், இன்று தொடர்ங்கும் பார்படாஸ் டெஸ்டில் விளையாடமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


பெரிய தண்டனை :


இது ஐசிசி.,யின் 2.3.1 விதியை மீறியிருப்பதாக ஒரு நீதிபதியும், 3வது விதி மீறியிருப்பதாக மற்ற ஒருவரும் தெரிவித்துள்ளனர். முதல் கட்டமாக 3 அபராத புள்ளியும், ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 10ம் தேதி இந்த பிரச்னை குறித்து மேலும் ஒரு தீர்ப்பு வழங்கப்படலாம் அதில் 4 அல்லது 8 இடைநீக்க புள்ளி வழங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், வார்னர், பேன்கிராஃப்ட் ஆகிய வீரர்கள் அண்மையில் முடிந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் போது பந்தை சேதப்படுத்தியதால், ஸ்மித், வார்னருக்கு ஒரு ஆண்டும், பேன்கிராஃப்டுக்கு 7 மாதங்களும் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கபட்டுள்ளது. இதனால் இவர்கள் சண்டிமலுக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்க குரல் உயர்த்தியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.