ஹரியானாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ₹28 லட்சம் மதிப்புள்ள எரிசாராயம் பறிமுதல்

ஹரியானா மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 28 லட்சம் ரூபாய் மதிப்புள்ள எரிசாராயத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர். மேலும் வாகனத்தை ஓட்டி வந்த 2 பேரைக் கைது செய்து விசாரித்து வருகின்றன்னர்.

சேலம் – கரூர் தேசிய நெடுஞ்சாலையில், நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் அருகில் மதுவிலக்குப் பிரிவு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெட்ரோல் பங்க்கில் ஹரியானா மாநிலம் குர்கானில் இருந்து வந்த சரக்கு வாகனம் ஒன்றினை போலீசார் சுற்றி வளைத்தனர். வாகனத்தில் இருந்த, ஆந்திர மாநிலம் சித்துார் மாவட்டத்தைச் சேர்ந்த சிவையா, சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த கமலக்கண்ணன் இருவரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.அவர்களது வாகனத்தில், மொத்தம் 27,50,000 ரூபாய் மதிப்பிலான  19, 250 லிட்டர் எரிசாராயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 550 கேன்களில் இருந்த எரிசாராயத்தை, வாகன ஓட்டுநர்கள், பாலாஜி டிரேடிங் என்ற பெயரில் குர்கானில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு கொண்டு செல்ல முயன்றது விசாரணையில் தெரியவந்தது.

மேலும் எளிதில் தீப்பற்றக் கூடிய இந்த எரிசாராயத்தை வைத்து முறைகேடாக சாராயம் தயாரிக்க முடியும் என்பதால் இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வடமாநிலங்களில் இருந்து தமிழகம் வழியாக கேரளா செல்லும் வழியை வாகன ஓட்டுநர்கள் ஏன் தேர்ந்தெடுத்தனர் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றன்னர்.

புதுச்சேரிக்கு எரிசாராயத்தை இந்த கும்பல் கடத்திச் செல்வதன் திட்டம் என்ன? சாராயத்திற்கும் எரிசாராயத்திற்கும் என்ன வேறுபாடு?

குறைந்த அளவிலான எரிசாராயத்தில் தண்ணீர் கலந்து அதிகளவு சாராயத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளனரா? என பல கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகின்றன்னர்.

கேரளாவிலும், புதுவையிலும் ஏராளமான சாராயக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றை குறிவைத்தே எரிசாராய கடத்தல் கும்பல் செயல்பட்டு வருகிறது. மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு எரிசாராயம் தேவைப்படுகிறது என்ற போர்வையில் நாடு முழுவதும் எரிசாராயத்தை இந்த கும்பல் கடத்திவருவதாக போலீசார் கூறியுள்ளனர்.

Loading…

எரிசாராயத்தைக் கொண்டு தயாரிக்கப்படும் சாராயத்தை குடித்தால், குடல் புண் தொடங்கி புற்றுநோய் வரை பல நோய்கள் வர வாய்ப்பு அதிகம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.  மேலும் கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம் மாவட்டங்களில் எரிசாராயத்தால் தயாரிக்கப்படும் சாராயம் சட்டவிரோதமாக விற்பனை ஆகிவருவதாக உளவுத் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

Also see…