1 வாரத்திற்கு வேக வைத்த முட்டையை காலையில் சாப்பிடுங்க…அப்பறம் பாருங்க என்ன நடக்குதுன்னு..!

முட்டை சைவமா..? அசைவமா..? முட்டையில் இருந்து கோழி வந்ததா..? கோழியில் இருந்து முட்டை வந்ததா..? இப்படி முட்டை பற்றிய கேள்விகளை நாம் அதிகம் கேட்டிருப்போம். சிலருக்கு இன்னும் சில கேள்விகளும் இருக்க கூடும். அதாவது முட்டையை அப்படியே பச்சையாக சாப்பிட்டால் நல்லதா..? வேக வைத்து சாப்பிட்டால் நல்லதா..? இல்லை ஹாஃப் பாயில் போட்டு சாப்பிட்டால் நல்லதா..? போன்ற கேள்விகளும் கூடவே இருக்கும். முட்டையை வேக வைத்து சாப்பிடுவதால் பல்வேறு நன்மைகள் நமக்கு உண்டாகுமாம். வேக வைத்த முட்டையை ஒரு வாரம் சாப்பிட்டு வந்தால் உடலில் எண்ணற்ற மாற்றங்கள் உண்டாகும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். வேக வைத்த முட்டையை வெறும் 1 வாரத்திற்கு சாப்பிட்ட பிறகு உங்களின் உடலில் என்ன விதமான மாற்றங்கள் உண்டாகிறது என்பதை நீங்களே கண் கூடாக பார்ப்பீர்கள். இது எந்த வகையில் சாத்தியம் ஆகும் என்பதை இந்த பதிவில் அறிந்து கொள்வோம். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் கல்லீரல் உடல் உறுப்புகளில் மிக பெரிய உறுப்பான கல்லீரல் பாதிக்கப்பட்டால் மரணம் மிக சீக்கிரத்தில் நம் வீட்டு கதவை தட்டும். கல்லீரலில் சேர்ந்துள்ள நச்சுக்களை அகற்றினாலே கல்லீரல் பாதிப்பு இல்லாமல் இருக்கும். வேக வைத்த முட்டையை தினமும் காலையில் 1 வாரத்திற்கு சாப்பிட்டு வந்தால் இதன் பலன் உங்களுக்கு கிடைக்கும். தாம்பத்திய வாழ்வு வேக வைத்த முட்டையை காலையில் சாப்பிட்டு வரும் தம்பதியினர் மிக விரைவிலே கருத்தரிக்க இயலும். இதில் உள்ள வைட்டமின் பி9 செக்ஸ் ஹார்மோன்களை உற்பத்தி செய்து சிறப்பான தாம்பத்தியத்தை தரும். இதனால் எளிதிலே கருத்தரிக்க முடியும். எடை குறைய எவ்வளவு பாடுபட்டாலும் எடை குறையவே மாட்டுதா..? உங்களின் இந்த வேதனையை தீர்க்க வேக முட்டை உள்ளது. காலை உணவில் வேக வைத்த முட்டையை சாப்பிட்டு வந்தால் மிக எளிதாக உடல் எடை குறையுமாம். மார்பக புற்றுநோய் வேக வைத்த முட்டையை சாப்பிடுவதன் மூலம் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்க இயலும். காரணம் இதிலுள்ள Choline என்கிற முக்கிய மூலப் பொருள் தான். வேக வைத்த முட்டையை சாப்பிடுவோருக்கு 18 சதவீதம் மார்பக புற்றுநோயிற்கான பாதிப்பு குறையுமாம். MOST READ: புற்றுநோய் உருவாவதை தடுக்கும் திராட்சை விதைகள்..! சாத்திய கூறுகளை கண்டறிந்த விஞ்ஞானிகள்..! மூளை செல்கள் மூளையின் செயல்திறன் அதிகமாக உள்ளது என்பதை அறிய இவற்றின் தொடர்பு கொள்ளும் தன்மை தான் உதவும். ஒரு வாரத்திற்கு வேக வைத்தமுட்டையை காலையில் சாப்பிட்டு வந்தால் மூளையின் திறன் படு வேகமாக இருக்கும். அத்துடன் ஞாபக சக்தியையும் இது கூட்டும். இதய நோய்கள் இரத்தத்தில் அதிக அளவில் சேர்ந்துள்ள கொலெஸ்ட்ராலை குறைக்க வேக வைத்த முட்டையை சாப்பிட்டு வாங்க. இதனால் இதய நோய்களின் பாதிப்பும் உங்களுக்கு உண்டாகாது. காரணம் இதிலுள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் தான். வயிற்று உப்பசம் வயிறு உப்பி போயிருந்தால் இதை தடுக்க அது தொப்பை போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும். இது போன்று பலருக்கும் ஏற்படும். இந்த பிரச்சினைக்கும் வேக வைத்த முட்டை வைத்தியம் தீர்வு தருகிறது. உங்களின் வயிற்று உப்பசத்தை குறைக்க வேக வைத்த முட்டை போதும். எலும்புகளுக்கு வேக வைத்த முட்டையை சாப்பிடுவதால் எலும்புகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் அதிக ஆரோக்கியத்துடன் வைத்து கொள்ளலாம். இவற்றில் உள்ள வைட்டமின் டி எலும்பு தேய்மானம், மூட்டு வலி போன்றவற்றை குணப்படுத்தும். MOST READ: ஆண்கள் தாம்பத்தியத்திற்கு முன் தினமும் 3 பேரீச்சைகளை சாப்பிட்டு வந்தால் என்னென்ன பயன்கள் கிடைக்கும்? முக அழகிற்கு தற்போதைய ஆராய்ச்சி வேக வைத்த முட்டையை சாப்பிட்டு வருவதால் நம் சரும பாதுகாப்பு அதிகரிக்கும் என கூறியுள்ளது. மேலும், ஆண்களின் முகத்தில் உண்டாகும் பருக்களை இது தடுக்கிறதாம். கூடவே கரும்புள்ளிகளையும் இது போக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். எத்தனை முட்டை 1 வாரத்திற்கு தினமும் தொடர்ந்து 2 வேக வைத்த முட்டையை சாப்பிட்டு வந்தால் மேற்சொன்ன பலனை அடைய முடியும். மறக்காமல் காலை உணவாக இதை சாப்பிட்டு வாருங்கள். உங்கள் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டது என்பதை கமெண்டில் பதிவிடுங்கள் நண்பர்களே. பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published.