ராஞ்சி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், இந்திய கேப்டன் விராட் கோலி ஒருநாள் அரங்கில் 41வது சதம் அடித்து அசத்தினார்.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இரு அணிகள் மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டி, முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் நடக்கிறது. இதில் ‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி, முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

கவாஜா கலக்கல்:
இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் பின்ச் (93), கவாஜா (104) கைகொடுக்க, ஆஸ்திரேலிய அணி, 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 313 ரன்கள் குவித்தது. இதன் மூலம் இந்திய அணிக்கு 314 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

அசுர வேக கோலி:
கடின இலக்கை துரத்திய இந்திய அணிக்கு, துவக்க வீரர் ஷிகர் தவான் (1), ரோகித் சர்மா (14), ராயுடு (2) என டாப் ஆர்டர் வீரர்கள் சொதப்பலாக வெளியேறினர். அடுத்து உள்ளூர் ரசிகர்களின் ஆக்ரோஷமாக வரவேற்புடன் களமிறங்கிய தோனி, 26 ரன்னில் ஜாம்பா சுழலில் போல்டானார்.

இந்நிலையில் தனி ஒருவனாக போராடிய கேப்டன் கோலி, அரைசதம் கடந்து அசத்தினார். இதன் மூலம் சர்வதேச ஒருநாள் அரங்கில் அதிவேக 4000 ரன்களை எட்டிய கேப்டன் என்ற உலக சாதனை படைத்தார். தவிர, இம்மைல்கல்லை எட்டிய 12வது கேப்டன் என்ற பெருமை பெற்றார் கோலி.

* தவிர, இம்மைல்கல்லை எட்டிய 4வது இந்தியரானார் கோலி.

அதுக்குள்ள ‘500’:
தவிர, இந்தாண்டு (2019) துவங்கி மூன்று மாதங்களுக்குள் இந்திய கேப்டன் விராட் கோலி ஒருநாள் அரங்கில் 500 ரன்களை கடந்து அசத்தினார்.

41வது சதம்:
இப்போட்டியில் சதம் அடித்த இந்திய கேப்டன் விராட் கோலி, சர்வதேச ஒருநாள் அரங்கில் 41வது சதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் சர்வதேச ஒருநாள் அரங்கில், அதிக சதம் அடித்துள்ள ஜாம்பவான் சச்சினின் சாதனையை (49 சதம்) கோலி அசுர வேகத்தில் நெருங்கி வருகிறார்.

முதல் 224 ஒருநாள் போட்டிக்கு பின் அதிக சதன் அடித்த வீரர்கள் பட்டியல்: விராட் கோலி (இந்தியா) – 41 சதம் ஆம்லா (தென் ஆப்ரிக்கா) – 27 சதம் (174 ஒருநாள் போட்டிகள் )டிவிலியர்ஸ் (தென் ஆப்ரிக்கா) – 25 சதம்சச்சின் (இந்தியா) – 23 சதம் ரோகித் சர்மா (இந்தியா) – 22 சதம் கங்குலி (இந்தியா) – 21 சதம்
* தவிர, ஒரே எதிரணிக்கு எதிராக அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் கோலி இரண்டாவது இடம் பிடித்தார்.

ஒரே அணிக்கு எதிராக அதிக சதம் அடித்தா வீரர்கள் பட்டியல்: சச்சின் (இந்தியா) – 9 சதங்கள் (எதிரணி- ஆஸ்திரேலியா)சச்சின் (இந்தியா) – 8 (எதிரணி – இலங்கை)விரா கோலி (இந்தியா) – 8 (எதிரணி- இலங்கை, ஆஸ்திரேலியா)
கோலி சதம் சிறப்புகள்: ஒருநாள் அரங்கில் 41வது சதம்ஆஸி., எதிராக 8வது சதம் இந்திய மண்ணில் 19வது சதம்ஆசிய மண்ணில் 28வது சதம்இந்தாண்டில் (2019) 3வது சதம்கேப்டனாக 19வது சதம் ராஞ்சி மைதானத்தில் 2வது சதம்