ராஞ்சி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், இந்திய துவக்க வீரர் ஷிகர் தவான், வெறும் 1 ரன்னில் அவுட்டாகி சொதப்பினார். இதன் மூலம் அவரின் மோசமான் பார்ம் தொடர்ந்து வருகிறது.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இரு அணிகள் மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டி, முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் நடக்கிறது. இதில் ‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி, முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

கவாஜா கலக்கல்:
இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் பின்ச் (93), கவாஜா (104) கைகொடுக்க, ஆஸ்திரேலிய அணி, 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 313 ரன்கள் குவித்தது. இதன் மூலம் இந்திய அணிக்கு 314 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

தொடரும் தவான் சொதப்பல்:
கடின இலக்கை துரத்திய இந்திய அணிக்கு, துவக்க வீரர் ஷிகர் தவான் வெறும் 1 ரன்னில் அவுட்டாகி சொதப்பலாக வெளியேறினார். இதன் மூலம் ஒருநாள் அரங்கில் தொடர்ந்து சொதப்பி வருகிறார்.

Not bad Maxy. Not bad. #INDvAUS https://t.co/292KyJsyUQ— Isa (@Pacebouncy) 1552048450000 தொடர்ந்து 17வது இன்னிங்ஸாக தவான் தனது தொதப்பலை தொடர்ந்து வருகிறார். இதன் மூலம், தனது பழைய மோசமான சாதனையை (டிசம்பர் 2013- அக்டோபர் 2014, 17 இன்னிங்ஸ்) தவான் சமன் செய்தார். இந்த இடைப்பட்ட இன்னிங்சில் தவான் ஒருமுறை கூட மூன்று இலக்க ரன்களை எட்டவில்லை.

@AndeDursu @SDhawan25 @klrahul11 @BCCI @imVkohli @RaviShastriOfc @RaunakRK Obviously.. a Bangladesh tour will be co… https://t.co/fRrPcsONWk— ಅಣ್ಣ ಬಾಂಡ್ (@shanubhog) 1552048949000
@imVkohli , @BCCI – I can definitely score more runs than @SDhawan25 has in the last 15 matches. Can i play for the… https://t.co/fL7zQcLxs6— Manoj Bhatia (@bhatiamanoj03) 1552048836000
Indian Army doing what it does best. Falling apart faster than speed of light. Major Rohit Sharma and Colonel Shikh… https://t.co/gHLXKwSz5Z— Usman Shahid (@Steel_Man_Usman) 1552048992000
ஷிகர் தவானின் கடைசி 17 ஒருநாள் இன்னிங்ஸ்கள் – 15 4 29 35 38 6 0 32 23 75* 66 28 13 6 0 21 1. உலகக்கோப்பை நெருங்கும் நேரத்தில் தவான் தனது சொதப்பலை தொடரும் பட்சத்தில் அணியில் இருந்து நீக்க வாய்ப்புள்ளதாக, விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.