104 ரன்னில் சுருண்ட வெஸ்ட் இண்டீஸ் : எளிய வெற்றியை நோக்கி இந்தியா!

திருவனந்தபுரம் : இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் 105 ரன்களுக்கு வெஸ்ட் இண்டீஸ் சுருண்டுள்ளது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 4 போட்டிகள் முடிவில், இந்தியா 2-1 என முன்னிலை வகிக்கிறது. ஒரு போட்டி டிரா ஆனது. இதனால் இன்றைய போட்டி முக்கியத்துவமாக பார்க்கப்படுகின்றது.

சொதப்பிய வெஸ்ட் இண்டீஸ் :தொடக்கம் முதல் ரன் எடுக்க திணறிய வெஸ்ட் இண்டீஸ் விக்கெட்டுகளையும் வரிசையாக பறிகொடுத்தது. வெஸ்ட் இண்டீஸின் ரோவ்மன் பவல் 16, மார்லோன் சாமுவேல் 24, ஜெசன் ஹோல்டர் 25 என மூன்று வீரர்கள் மட்டும் இரட்டை இலக்க ரன்களை கடந்தனர். மற்ற வீரர்கள் சொர்ப்ப ரன்னுக்கு விக்கெட்டை இழந்தனர்.

மேலும் படிக்க :
5வது ஒருநாள் போட்டி : லைவ் அப்டேட்

இந்தியாவின் ஜடேஜா 3, பும்ரா, கலீல் தலா 2, புவனேஸ்வர், குல்தீப் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

105 இலக்கு :இந்தியாவின் சிறப்பான பவுலிங்கால் வெஸ்ட் இண்டீஸ் 31.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 104 ரன்கள் மட்டும் எடுத்துள்ளது.

105 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக எளிய இலக்கை நோக்கி இந்தியா விளையாட உள்ளது.

வெஸ்ட் இண்டீஸின் மோசமான சாதனை :இந்த தொடரில் வெ.இ முதல் 3 ஒருநாள் போட்டியில் 326 ரன்களும் 24 விக்கெட்டுகளும் இழந்து, சராசரி 38.58 ரன்களும், ரன் ரேட் : 6.17 ரன்களும் வைத்திருந்தது.

கடைசி 2 ஒருநாள் போட்டியில் வெறூம் 257 ரன்களும் 20 விக்கெட்டுகளும் இழந்து, சராசரி 12.85 ரன்களும், ரன் ரேட் : 3.77 ரன்கள் மட்டுமே வைத்துள்ளது.