மெல்போர்ன்: உலககோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஜெர்சி மற்றும் கிட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் இந்த ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் மே 30, 2019ல் துவங்கி ஜூன் 14, 2019 வரை நடக்கவுள்ளது.

மொத்தமாக 45 லீக் போட்டிகள் மற்றும் 3 நாக் – அவுட் போட்டிகள் என 48 போட்டிகள் சுமார் 12 நகரங்களில் நடக்கவுள்ளது. கடந்த 1992ல் பென்ஷன் மற்றும் ஹெட்ஜ்ஸ் உலகக்கோப்பை முறைப்படி இத்தொடர் நடக்கவுள்ளது.

டாம் பிளண்டலுக்கு வாய்ப்பு: ஆளுக்கு மொதல்ல… உலகக்கோப்பை அணியை அறிவித்த நியூசிலாந்து!

10 அணிகள் பங்கேற்பு….
இத்தொடரில் ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, இலங்கை அணிகள் முதல் 8 அணிகள் என்ற தரவரிசைப்படியும், வெஸ்ட் இண்டீஸ், மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் தகுதிச்சுற்று மூலமும் தேர்வு செய்யபட்டது.

பக்கிங்ஹாம் அரண்மனை அருகே பிரமாண்ட உலகக்கோப்பை துவக்க விழா?

பரபரப்பு அதிகம்:
இத்தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து- தென் ஆப்ரிக்கா அணிகள் மோதுகின்றன. இப்போட்டிக்கு முன்பாக இங்கிலாந்தின் பக்கிங்ஹாம் அரண்மனை மற்றும் டிராபால்கர் சதுக்கத்தை இணைக்கும் மாலில் உலகக்கோப்பைக்கான துவக்க விழாவை பிரமாண்டமாக துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.

Australia’s #CWC kit unveiled! or ? https://t.co/Fg9QXgXce7— ICC (@ICC) 1554786665000
ஆஸி., ஜெர்சி:
இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் புது ஜெர்சி மற்றும் கிட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஜெர்சி இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்ற போது, ஆஸ்திரேலிய அணி வீரர்கள் அணிந்திருந்த ஜெர்சியைப் போலவே உள்ளது.

A new look for the Aussies at this year’s World Cup! #CWC19 https://t.co/ZeundmRJcg— cricket.com.au (@cricketcomau) 1554785609000
ஓட்டு முறை:
வழக்கமான மஞ்சள் மற்றும் கிரீன் நிறத்தில் உள்ள இந்த ஜெர்சியில் பேண்ட்டில் ஒரத்தில் பச்சை நிறத்தில் கோடுகள் உள்ளது. இந்த ஜெர்சியை ஆஸ்திரேலிய ரசிகர்கள் ஓட்டு முறையில் தேர்வு செய்தனர். இதே போல 7 ஜெர்சி டிசைகளில் இந்த ஜெர்சியை ஆஸ்திரேலிய ரசிகர்கள் தேர்வு செய்தனர்.

யாருடன் மோதல்:
ஆஸ்திரேலிய அணி உலகக்கோப்பைக்கு முன்பாக வரும் மே 25, 27 தேதிகளில் நடக்கும் பயிற்சி போட்டியில் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணியை எதிர்கொள்கிறது. தொடர்ந்து வரும் ஜூன் 1ம் தேதி உலககோப்பை தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேய அணி, ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.