புதுடெல்லி: சர்வதேச அளவில் சிறந்த கிரிக்கெட் வீரராக மூன்றாவது முறையாக இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, 30. சர்வதேச அரங்கில் சாதனைக்கு மேல் சாதனைகளாக குவித்து வரும் இவர் கடந்த 2016 ஆண்டு முதல் விஸ்டன் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதை வென்று வருகிறார்.

‘ஹாட்ரிக் ஹீரோ’:
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதை வென்றுள்ளார். இதன் மூலம் இவ்விருதை மூன்று முறைக்கு மேல் விஸ்டன் பெற்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை கோலி பெற்றார்.

‘டான்’ பிராட்மேன் முதலிடம்:
விஸ்டன் விருதை மூன்று முறைக்கு மேல் வென்ற வீரர்கள் பட்டியலில் ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேன் (10முறை) முதலிடத்தில் உள்ளார். இவரை தொடர்ந்து ஜேக் ஹாப்ஸ் (8 முறை) உள்ளார்.
இந்நிலையில் இவர்களை தொடர்ந்து இவ்விருதை அதிக முறை வென்ற வீரர்கள் பட்டியலில் கோலி மூன்றாவது இடத்தில் உள்ளார்.

ஐந்து பேர் பட்டியல்:
இந்நிலையில் விஸ்டன் சிறந்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலியுடன் இங்கிலாந்தின் ஜாஸ் பட்லர், சாம் கரண், கவுண்டி சம்பியன் வெற்றிக்கேப்டன் ரோரி பர்ன்ஸ், இங்கிலாந்து பெண்கள் அணியின் டாமே பியாமவுன்ட் ஆகியோரும் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

இந்திய பெண்கள் அணியின் ஸ்மிருதி மந்தனா சிறந்த கிரிக்கெட் வீராங்கனையாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.