செயிண்ட் ஜான்ஸ்: உலகக்கோப்பைக்கான விண்டீஸ் அணியை அந்நாட்டு கிரிக்கெட் போர்டு அறிவித்துள்ளது. அதில் கிறிஸ் கெயில், ஆண்டிரூ ரசல் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் இந்த ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் மே 30, 2019ல் துவங்கி ஜூன் 14, 2019 வரை நடக்கவுள்ளது.

மொத்தமாக 45 லீக் போட்டிகள் மற்றும் 3 நாக் – அவுட் போட்டிகள் என 48 போட்டிகள் சுமார் 12 நகரங்களில் நடக்கவுள்ளது. கடந்த 1992ல் பென்ஷன் மற்றும் ஹெட்ஜ்ஸ் உலகக்கோப்பை முறைப்படி இத்தொடர் நடக்கவுள்ளது.

10 அணிகள் பங்கேற்பு….
இத்தொடரில் ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, இலங்கை அணிகள் முதல் 8 அணிகள் என்ற தரவரிசைப்படியும், வெஸ்ட் இண்டீஸ், மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் தகுதிச்சுற்று மூலமும் தேர்வு செய்யபட்டது.

BREAKING: @windiescricket name their #CWC19 squad! https://t.co/Ca61nyDmc8— Cricket World Cup (@cricketworldcup) 1556127421000
மீண்டும் கெயில்:
இத்தொடரில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட விண்டீஸ் அணியை அந்நாட்டு கிரிகெட் போர்டு அறிவித்துள்ளது. இதில் ஜேசன் ஹோல்டர் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். உலகக்கோப்பை தொடருக்கு பின் ஓய்வுக்காக காத்திருக்கும் 40 வயதான கிறிஸ் கெயில் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

நரைன் புறக்கணிப்பு:
அதே போல ஐபிஎல்., தொடரில் கொல்கத்தா அணிக்காக அலறவிடும் ஆல்ரவுண்டர் ஆண்டிரூ ரசல் அணியில் இடம் பெற்றுள்ளார். ஆனால் கெய்ரன் போலார்டு, சுனில் நரைன் ஆகியோர் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

WEST INDIES SQUAD FOR ICC CRICKET WORLD CUP 2019 ENGLAND & WALES #WIAllin #MenInMaroon #ItsOurGame #CWC19 ⬇️⬇️⬇️⬇️… https://t.co/E4DSXryI7D— Windies Cricket (@windiescricket) 1556131067000

#CWC19 “To have a player the calibre of Chris (Gayle) in the side to lead the batting with his vast experience and… https://t.co/jsk0qgTtLR— Windies Cricket (@windiescricket) 1556131514000 அணி விவரம்: ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), ஆண்டிரூ ரசல், ஆஸ்லே நர்ஸ், கார்லோஸ் பிராத்வெயிட், கிறிஸ் கெயில், டேரன் பிராவோ, எவின் லீவிஸ், பாபியன் ஆலன், கீமர் ரோச், நிகோலஸ் பூரன், ஒசேன் தாமஸ், சாய் ஹோப், ஷானன் கேபிரியல், செல்டன் கோட்ரல், ஷிம்ரான் ஹேர்மேயர்.