2 பெண்களின் அப்பாவாக கேட்கிறேன்.. பொள்ளாச்சி சம்பவம் பற்றி கமல் பேசியுள்ள வீடியோ

#Kamal Haasan

பொள்ளாச்சியில் பெண்களுக்கு நடந்தது பற்றி தமிழ்நாடே கொந்தளித்து வரும் நிலையில் அரசு அதுபற்றி இதுவரை வாய் திறக்காமல் உள்ளது. போராட்டம் நடத்திய கல்லூரி மாணவர்கள் மீது போலீஸ் தாக்குதல் நடத்தியுள்ளது.இது பற்றி நடிகர் கமல்ஹாசன் இப்போது கோபமாக பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் “கட்சி தலைவராக இதை கேட்கவில்லை. 2 பெண்களின் அப்பாவாக கேட்கிறேன்” என தமிழக முதலமைச்சருக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.”அந்த பெண் அலறிய சத்தம் கேட்டதில் இருந்து மனசு பதறுது. கண்ணை மூடும் ஒவ்வொரு நொடியும் திரும்ப திரும்ப காதில் கேட்கிறது” என கமல் தெரிவித்துள்ளார்.pic.twitter.com/5OczRUkhbj— Kamal Haasan (@ikamalhaasan) March 14, 2019