2.0 கர்நாடகாவில் மட்டும் இத்தனை கோடி வசூலா! ஆல் டைம் நம்பர் 1

#2.0 (Enthiran 2)
#Rajinikanth
#Box Office

2.0 தமிழ் சினிமாவின் மைல் கல்லாக அமைந்துள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்றுள்ளது, சுமார் ரூ 600 கோடிகளுக்கு மேல் இப்படம் உலகம் முழுவதும் வசூல் செய்துள்ளது.இந்நிலையில் ரஜினிக்கு எப்போதும் கர்நாடகாவில் மிகப்பெரும் ரசிகர்கள் கூட்டம் இருப்பது அனைவரும் அறிந்ததே, அதை 2.0 மூலம் ரஜினிகாந்த் மீண்டும் நிரூபித்துள்ளார்.ஆம், 2.0 தற்போது வரை கர்நாடகாவில் மட்டும் ரூ 45 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாம்.இதுவரை வேறு எந்த படமும் இத்தனை கோடி வசூல் செய்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது, மேலும், இதற்கு முன் ரஜினிகாந்த் நடித்த கபாலி படம் ரூ 28 கோடி அங்கு வசூல் செய்ததே தமிழ் படங்களில் அதிக வசூலாக இருந்தது.இதை 2.0 முறியடித்து முதலிடத்தில் உள்ளது. ஆனால், ரூ 70 கோடி வரை இப்படம் அங்கு வசூல் செய்யும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.