2.0 படமும் இல்லை, ட்ரைலரும் இல்லை! ஆனால் இந்த தீபாவளிக்கு இது தான் ஸ்பெஷல்

#Rajinikanth
#Rajini Fans

சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் தற்போது தான் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பேட்ட படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் அவரின் 2.0 வரும் நவம்பர் 29 ல் ரிலீஸ் ஆகிறது.ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரைலர் வரும் நவம்பர் 3 ல் தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸாகிறது. இதனை அவரே அறிவித்துவிட்டார். இதைவிட சூப்பரான ஒரு விசயம். அருணாச்சலம் படம் ரஜினியை இன்னும் யாராலும் மறக்க முடியாது. இப்படத்தின் அவரின் கெட்டப்பே தனி ஸ்டைல் தான்.அதிலும் கையில் ஒரு தங்க காப்பு அணிந்திருப்பார் பாருங்கள். அநேக ஆண்களின் மனதையும் ஈர்த்தது அன்று. தற்போது நகைக்கடைகளில் ஆண்கள் பலரும் அதை தான் விரும்பி வாங்குகிறார்களாம். இந்த வருட தீபாவளி ஸ்பெஷலே அதுதான் என்கிறார்கள் நகைக்கடை நிறுவனத்தார்.