2020 அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறாரா கமலா ஹாரிஸ்?

அமெரிக்க செனெட் சபையில் இடம்பெற்றுள்ள முதல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான கமலா ஹாரிஸ் , அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து விரைவில் முடிவு செயவதாகத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கவாழ் இந்தியரான கமலா ஹாரிஸ் கடந்த 2016-ம் ஆண்டு அமெரிக்க செனெட் சபை உறுப்பினராகத் தேர்வானார். அடுத்த அதிபர் தேர்தலுக்குத் தகுதியான வேட்பாளர் யார் என்பது குறித்து சமீபத்தில் வெளியான கருத்துக்கணிப்பில் கமலா ஹாரிஸ் ஐந்தாம் இடம்பிடித்துள்ளார்.ஜனநாயகக் கட்சியின் சார்பாக  போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த கமலா ஹாரிஸ், “இந்த விடுமுறைக் காலத்தில் என் குடும்பத்தாருடன் இணைந்து கலந்தாலோசிப்பேன். குடும்பத்தாரின் முடிவை அறிந்த பின்னர் அதிபர் தேர்தலில் போட்டியிடுதல் குறித்த என் விருப்பத்தை வெளிப்படுத்துவேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் முக்கிய மாகாணங்களில் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற இடைத்தேர்தலின் போது ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்களுக்காக அனல் பறக்கும் பிரசாரங்களில் ஈடுபட்டு வைரலானவர் கமலா ஹாரிஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பார்க்க: இசை காப்புரிமை: எது இலவசம், எது இலவசமல்ல?