265 வயதில் வாக்காளர்களா? வாக்காளர் பட்டியலில் எக்கச்சக்க குழப்பம்!

லூதியானா மக்களவை தொகுதியில் 265 வயதில் இரண்டு வாக்காளர்களும் 144 வயதில் ஒரு வாக்காளரும் 118 வயதில் 273 வாக்காளர்களும் உள்ளதாக வெளிவந்த வாக்காளர் பட்டியல் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

லூதியானா மக்களவை தொகுதியின் வாக்காளர் பட்டியல் அண்மையில் வெளியானது. அதில், 5,916 பேர் நூறு வயதை கடந்தவர்கள் என்ற தகவல் தேர்தல் அதிகாரியின் கவனத்துக்கு வந்தது.மேலும், ஒரு ஆண் வாக்காளர் மற்றும் ஒரு பெண் வாக்காளரின் வயது 265 என்று பதிவாகியுள்ளது. மேலும், ஒரு வாக்காளரின் வயது 144 என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால், தேர்தல் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். விசாரணையில் இவை அனைத்தும் வாக்காளர் பட்டியல் சேகரிக்க சென்ற அதிகாரிகள் செய்த பிழை என்பது தெரியவந்தது.

லூதியானா மக்களவை தொகுதியில் வெறும் 57 வாக்காளர்கள் தான் நூறு வயதை கடந்தவர்கள் பட்டியலில் உண்மையான வாக்காளர்கள் என்றும் அதிலும் 35 பேர் மட்டும் தான் தற்போது உயிரோடு உள்ளனர் என்பதும் தற்போது நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

வாக்காளர் பட்டியலில் தங்களது வயது 265 என்று பதிவானதை கண்டு லூதியானாவின் அக்‌ஷிதா தவான் மற்றும் அஷ்வனி குமார் அதிர்ச்சியடைந்தனர். அதுபோலவே 144 வயது எனக் குறிப்பிடப்பட்டிருந்த சாரதா தேவி என்பவரும் அதிர்ச்சி அடைந்தார்.

இந்த குளறுபடிகள் குறித்து விளக்கம் அளித்த லூதியானாவின் மாநகராட்சி துணை ஆணையர் பிரதீப் அகர்வால், ”கோப்புகளில் இருந்த தரவுகளை கம்ப்யூட்டரில் பதிவு செய்யும்போது ஏற்பட்ட தட்டச்சு பிழைகளால் இந்த வயது குளறுபடி நடந்துள்ளது. தற்போது, இவை கண்டறியப்பட்டு சரி செய்யப்பட்டுள்ளது” என்றார்.

இவை அனைத்திற்கும் மேலாக 2000-ம் ஆண்டில் பிறந்த முதல் தலைமுறை வாக்காளர்கள் 273 நபர்களின் வயது 118 என்று வாக்காளர் பட்டியலில் பதிவாகியுள்ளது.Loading… Also Watch: