7 லட்ச ரூபாய்க்கு மதிய உணவு சாப்பிட்ட கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா- எப்படி எல்லாம் ஏமாத்துராங்க!

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா மதிய உணவு மட்டும் 7 லட்ச ரூபாய்க்கு சாப்பிட்டதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணிக்காக 10 டெஸ்ட் போட்டியிலும், ஐபிஎல் தொடரில் 7 போட்டிகளிலும் விளையாடியவர் ஆகாஷ் சோபரா. 40 வயதாகும் ஆகாஷ் சோப்ரா, தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராக செயல்பட்டு வருகின்றார்.

7 லட்சத்துக்கு மதிய உணவு!

இந்தோனேசியாவுக்கு சுற்றுலா சென்ற ஆகாஷ் சோப்ரா அங்குள்ள ஒரு இந்தியன் ஹோட்டலுக்கு மதிய உணவு சாப்பிட சென்றுள்ளார்.


அங்கு 6 உணவுகளை வாங்கி சாப்பிட்டுள்ளார். அவர் சாப்பிட்டதற்கு இந்தோனேசியன் ரூபாயில் 606,000 பில் வந்துள்ளது. அதோடு வரி எல்லாம் சேர்த்து கிட்டத்தட்ட 7 லட்சம் (இந்தோனேசியன் ரூபாய் 699,930) பில் வந்துள்ளது.

தான் மதிய உணவு சாப்பிட்டதற்கு 7 லட்சம் ரூபாய் செலவழித்ததாக தனது டுவிட்டரில் போட்டு அனைவரையும் கலாய்த்து ஏமாற்ற நினைத்தார்.

வெறும் ரூ. 3,334 செலவு:

இந்தோனேசியன் ரூபாய் கணக்கின் படி, ஒரு இந்திய ரூபாய்க்கு – 210 இந்தோனேசியன் ரூபாய்க்கு சமமாகும். இதனால் அவர் கட்டிய 7 லட்சம் ரூபாய் பில்லுக்கு வெறும் ரூ. 3,334 இந்திய ரூபாய் தான் செலவழித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.