8 ஆம் வகுப்பு வரை ‘அனைவரும் தேர்ச்சி திட்டம்’ ரத்து!!

5 முதல் 8 ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி பெறும் திட்டத்தை ரத்து செய்யும் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட கட்டாய கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி, 5 முதல் 8 ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதனடிப்படையில், மாணவர்கள் தேர்ச்சி பெறாதபோதும், அடுத்த வகுப்பிற்கு அனுப்பப்பட்டனர்.

இந்நிலையில், இந்தச் சட்டத்தில் திருத்தம் செய்து, மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் புதிய மசோதா ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அதன்படி, 5 முதல் 8 வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் இறுதித் தேர்வில் தோல்வியடையும் பட்சத்தில், அடுத்த இரண்டு மாதங்களில் மறுத்தேர்வு நடைபெறும். அதிலும் மாணவர்கள் தோல்வியடைந்தால், மாணவர்கள் மீண்டும் அதே வகுப்பில் அமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் ஆரம்பக்கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.