8 வழிச்சாலை வழக்கில் உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு – ராஜேந்திர பாலஜி

சென்னை – சேலம் எட்டுவழிச்சாலை அறிவிப்பாணையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பை எதித்து மேல்முறையீடு செய்யப்படும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அறிவித்துள்ளார்.

சென்னை – சேலம் இடையே அறிவிக்கப்பட்டிருந்த 8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிரான வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.சாலை திட்டத்துக்கான அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும், கையகப்படுத்தப்பட்ட நிலத்தை மீண்டும் உரிமையாளர்களிம் ஒப்படைக்க வேண்டும், கருத்துக் கேட்பு கூட்டங்கள் நடத்தி மீண்டும் திட்ட அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

தீர்ப்பை அப்பகுதியில் உள்ள மக்கள் கொண்டாடியுள்ள நிலையில், பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் வரவேற்றிருந்தனர்.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் இன்று பேட்டியளித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும்.

8 வழிச்சாலை போன்ற திட்டங்கள் நாட்டுக்கு தேவை. தீர்ப்பால் அரசுக்கு பின்னடைவு இல்லை. கூட்டணி தலைவர்களுடன் பேசி முதல்வர் முக்கிய முடிவை எடுப்பார் என்று கூறினார்.

அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவின் எம்.பி அன்புமணி, சாலை திட்டத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்த மனுதார்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.Loading…

தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

ஐ.பி.எல் தகவல்கள்:

POINTS TABLE:

SCHEDULE TIME TABLE:

ORANGE CAP:

PURPLE CAP:

RESULTS TABLE: