ஏர்டெல் சலுகை 50 ஜிபி டேட்டா வழங்குகிறது

பாரதி ஏர்டெல் நிறுவனம் திரும்பப் பெற்ற சலுகையை மீண்டும் அறிவித்துள்ளது. இந்த சலுகையில் பயனர்களுக்கு 50 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

பாரதி ஏர்டெல் நிறுவனம் ஏற்கனவே அறிவித்து, திரும்பப் பெற்ற ரூ.649 போஸ்ட்பெயிட் சலுகையை மீண்டும் அறிவித்துள்ளது.
ஏர்டெல் ரூ.649 சலுகை அந்நிறுவனத்தின் அதிகம் பயன்படுத்தப்படும் சலுகையின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளது.
மைபிளான் இன்ஃபினிட்டி சலுகைகளில் ஒன்றாக இந்த சலுகை இருக்கிறது. இதுதவிர ரூ.399, ரூ.499, ரூ.799 மற்றும் ரூ.1199 விலையில் ஏர்டெல் சலுகைகளை வழங்கி வருகிறது.
முன்னதாக ஏர்டெல் ரூ.649 சலுகையில் பயனர்களுக்கு 30 ஜிபி 3ஜி/4ஜி டேட்டா வழங்கப்பட்டது.
தற்சமயம் இந்த சலுகையில் 50 ஜிபி டேட்டா மற்றும் ரோல்ஓவர் வசதியும் வழங்கப்படுகிறது.
ஏர்டெல் சலுகை ரிலையன்ஸ ஜியோவின் ரூ.509 மற்றும் ரூ.709 சலுகைகளுக்கு போட்டியாக அமைந்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ சலுகைகளில் பயனர்களுக்கு முறையே 60 ஜிபி டேட்டா (தினமும் 2 ஜிபி) மற்றும் 90 ஜிபி டேட்டா (தினமும் 3 ஜிபி) வழங்கப்படுகிறது.
புதிய ரூ.649 சலுகையில் 50 ஜிபி டேட்டா மட்டுமின்றி, வாய்ஸ் கால், ரோமிங் உள்ளிட்டவற்றிலும் மாற்றம் செய்துளது. அந்த வகையில் பயனர்கள் எவ்வித கட்டுப்பாடும் இன்றி வாய்ஸ் கால் செய்ய முடியும்.
ஏர்டெல் போஸ்ட்பெயிட் சலுகையில் வழங்கப்படும் டேட்டா ரோல்ஓவர் சலுகையை கொண்டு பயனர்கள் பயன்படுத்தாத டேட்டாவை அடுத்த மாதத்தில் பயன்படுத்த முடியும்.
ரூ.649 சலுகையில் கூடுதல் சேவை வழங்கப்படுகிறது. அந்த வகையில் பயனர்கள் இதே சலுகையை ஏர்டெல் சைல்டு போஸ்ட்பெயிட் இணைப்பை பிரைமரி கணக்கில் சேர்த்து கொண்டு பயன்படுத்தலாம்.
இந்த சலுகையுடன் ஒரு ஆண்டு முழுக்க அமேசான் பிரைம் சேவையை பயன்படுத்துவதற்கான சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது.
இத்துடன் வின்க் டிவி சந்தா, நேரலை டிவி, திரைப்படங்கள் மற்றும் ஸ்மார்ட்போன் டேமேஜ் பாதுகாப்பு உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
சமீபத்தில் ஏர்டெல் வெளியிட்டிருக்கும் ரூ.499 போஸ்ட்பெயிட் சலுகையில் அன்லிமிட்டெட் உள்ளூர், வெளியூர் அழைப்புகள், ரோமிங்கின் போது அழைப்புகள், 40 ஜிபி 3ஜி/4ஜி டேட்டா மற்றும் ரோல்ஓவர் சலுகை வழங்கப்படுகிறது. இத்துடன் அமேசான் பிரைம் ஒரு வருட சந்தா வழங்கப்படுகிறது.