அந்தமான் அருகே வருகிற 25-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

‘தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு நிலை வலுவிழந்துவிட்டது. இந்நிலையில் வரும் 25-ம் தேதி காலகட்டத்தில் தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உருவாக வாய்ப்புள்ளது”.
மேலும் அடுத்து வரும் 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.