கோவையில் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழகத்தில் அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கோவையிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கோவை மதுக்கரை அய்யப்பன் கோவில் வீதியை சேர்ந்த பொதுமக்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி இருந்தனர்.

அய்யப்பன் கோவில் வீதியில் உள்ள 50 வீடுகளில் கருப்பு கொடி ஏற்றப்பட்டு இருந்தது.

இது குறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும் போது, முதல் கட்டமாக குறிப்பிட்ட பகுதியில் ஆதரவு தெரிவித்து கருப்பு கொடி ஏற்றப்பட்டு உள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்காவிட்டால் இப்பகுதியில் உள்ள அனைத்து பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம் என்றனர்.