Brian Lara:கிரிக்கெட்டுக்கே தலைவர் கிடைத்து விட்டார் – அரிதான இடத்திலிருந்து கோலிக்கு பாராட்டு

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பல சாதனைகளை வரிசையாக படைத்து வருகின்றார்.

லாரா புகழாரம் ;இந்திய அணிக்கு விராட் கோலி கிடைத்தது அதிர்ஷ்டம். அவரைப் போன்ற ஒரு சிறந்த வீரர், கேப்டனைப் பார்த்தில்லை. அவர் கிரிக்கெட்டில் எது செய்தாலும் அது சாதனையாக தான் இப்போது உள்ளது. அவரின் பேட்டிங், அவரின் உடல்தகுதி ஆகியவை மற்ற வீரர்களே பாராட்டும் அளவிற்கு உள்ளது.

அதுமட்டுமல்லாமல் அவர் பல விஷயங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் கிரிக்கெட் ஆட்டத்துக்கு ஒரு பெரும் தலைவர் கிடைத்தது போன்று உணர்கிறேன்.

சச்சினுடன் ஒப்பீடு :
நான் விளையாடும் காலத்தில் என்னையும், சச்சினையும் ஒப்பிட்டு பல செய்திகள் வந்தன. அதற்கு நாங்கள் அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

தற்போது சச்சினுடன் ஒப்பிடும் அளவிற்கு உயர்ந்துள்ள கோலி குறித்து பல செய்திகள் வருகின்றன. ஆனால் அதை கோலி பெரிதாக எடுத்துக் கொள்ளமாட்டார் என நம்புகிறேன். அப்போது தான் அவரின் உயர்வு மேலும் அதிகரிக்கும்.

ஏனெனில் ஒப்பிடுவது தவறானது. ஒவ்வொருவரும் ஒரு காலகட்டத்தில் அந்த சூழலுக்கு ஏற்ப விளையாடியவர்கள். அதனால் ஒருவரின் சாதனையை மற்றொருவருடன் ஒப்பிடக்கூடாது.

விராட் கோலியைப் போல இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் மிக சிறப்பாக விளையாடி வருவதாக பிரையன் லாரா குறிப்பிட்டுள்ளார்.