சுட்டெரிக்கும் வெயில், 30 ஆண்டுகளை விட இந்த ஆண்டு அதிகரிக்கு- வானிலை ஆய்வு மையம்.

கடந்த 30 ஆண்டுகளை காட்டிலும் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உலகளவில் தட்பவெப்ப நிலை கடந்த சில ஆண்டுகளாக மாறி வருகிறது.

இந்த மாற்றத்துக்கு புவி வெப்பமாகுதல் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

இந்த மாற்றம் இந்திய வானிலையிலும் ஏற்பட்டு வருகிறது.

தமிழகத்தில் மழைக்காலம் முடிந்த பிறகு பிப்ரவரி மாதத்திலும் குளிர்ந்த காற்று காலை மற்றும் மாலை வேளையில் வீசியது.

கடந்த காலத்தை விட குளிர் காலத்தில் கடுமையான பனிபொழிதலும் காணப்பட்டது.

கோடைக்காலத்தில் அதிக வெப்பமும், குளிர் காலத்தில் அதிக குளிரும் கூட வாட்டி வதைத்தது.

கோடைகாலத்தை எதிர் நோக்கி வரும் இந்த நிலையில் இப்போதே வெயிலின் தாக்கம் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது.

இரவில் கூட உஷ்ணத்தின் தாக்கத்தை உணர முடிகிறது.

ஏப்ரல், மே மாதங்களில் தான் கோடையின் தாக்கம் உச்சக்கட்டத்தை அடையும்.

இந்த வருடமும் கடந்த ஆண்டுகளை காட்டிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 30 ஆண்டுகளில் பருவ மழைக்கு முந்தைய (மார்ச், மே) மாதங்களில் நிலவும் வெப்பநிலை குறித்து அறிக்கை வெளியிடுவது வழக்கம்.

அதன்படி தமிழகத்தில் மார்ச் முதல் மே மாதம் வரையிலான கால கட்டத் தில் அதிகபட்ச வெப்ப நிலையானது முந்தைய ஆண்டுகள் அதே காலக்கட்டத்தில் இருந்த வழக்கமான வெப்ப நிலையை விட 0.5 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று கணித்துள்ளது.

சென்னை, கடலூர், நாகப்பட்டினம் போன்ற கடலோர மாவட்டங்களில் வெப்பமும் அதிகரித்து வருகிறது.

இந்த நிலை ஏப்ரல் மாதம் மத்தி வரை நீடிக்கும் என்று வானிலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மதுரை, திருத்தணி நகரங்களில் கோடை வெப்பம் அதிகளவு இருக்கும் என்றும் அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் கூறினர்.

சென்னையில் இப்போதே பகல் நேரங்களில் வீடுகளில் இருக்க முடியாத அளவுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

மின்விசிறி இல்லாமல் வீடுகளில் இருக்க முடியாத நிலை உருவாகி உள்ளது. இரவு நேரங்களில் கூட வியர்க்கும் நிலை காணப்படுகிறது.

காற்றுக்காக மக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடிய நிலை இப்போதே தொடங்கி விட்டது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.