காமன்வெல்த் 2018 ஆடவர் ஹாக்கி போட்டி சமனில் முடிந்தது

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நடந்து வருகின்றன.

இதில் ஆடவர் ஹாக்கி பிரிவில், இந்தியாவின் தில்பிரீத் சிங் ஒரு கோலும், ஹர்மன்பிரீத் சிங் பெனால்டி கார்னர் வாய்ப்பினை பயன்படுத்தி மற்றொரு கோலும் போட்டு 2-0 என்ற கணக்கில் அணியை முன்னணியில் நிறுத்தினர்.

இதனை அடுத்து பாகிஸ்தான் அணியின் ஜூனியர் முகமது இர்பான் ஒரு கோலும்.

போட்டி முடிவதற்கு 7 விநாடிகளுக்கு முன் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பினை பயன்படுத்தி அலி முபாஷர் ஒரு கோலும் அடித்து 2-2 என போட்டியை சமன் செய்தனர்.