‘Floccinaucinihilipilification’ என மோடியை விமர்சித்த சசிதரூர்: அர்த்தம் தேடும் நெட்டிசன்கள்!

பிரதமர் மோடியை விமர்சித்து காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் எழுதிய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள நீண்ட ஆங்கில வார்த்தை சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

‘தி பாரடாக்ஸிகல் பிரைம் மினிஸ்டர் நரேந்திர மோடி இன் இந்தியா’ என்ற தலைப்பில் சசி தரூர் புத்தகத்தை எழுதியுள்ளார். ஆனால், புத்தகத்தின் தலைப்பைக் காட்டிலும் பிரதமர் மோடியை அவர் விமர்சித்து ஒற்றை வார்த்தைதான் ட்விட்டரில் தற்போது விவாதமாக மாறி இருக்கிறது.ஆங்கிலத்தில் மிகவும் பெரிய வார்த்தையைக் கையாண்டு அதை மோடிக்கு விளக்கமாக சசிதரூர் குறிப்பிட்டுள்ளார். 400 பக்கத்தில் இந்த புத்தகம் எழுதப்பட்டு இருந்தாலும், இந்த ஒற்றை வார்த்தை சமூகவலைதள வாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Dr. Shashi Tharoor’s new book “THE PARADOXICAL PRIME MINISTER”, launches with a new addition to the Vocabulary “FLOCCINAUCINIHILIPILIFICATION”@ShashiTharoor @khushsundar @SimmiAhuja_ @JayasreeVijayan @kurup62 @DrSanjeevRajp4 @anushreearun13 @Anish_Cherian @prakashraaj pic.twitter.com/9TZ355hjiM
— VishakhCherian (@VishakhCherian) October 10, 2018

Floccinaucinihilipilification என்ற அதிகமான எழுத்துகளை கொண்ட இந்த வார்த்தைக்கு மதிப்பே இல்லாத பொருளுக்கு மதிப்பிடுவது என்று அர்த்தமாகும். இதை மோடிக்கு ஒப்பாகக் குறிப்பிட்டு சசிதரூர் விமர்சித்துள்ளார். ஆங்கிலத்தில் மிகவும் நீளமான வார்த்தையை அரிதிலும் அரிதாக பயன்படுத்துவார்கள்.

pic.twitter.com/kJaIolU3bK
— Shashi Tharoor (@ShashiTharoor) October 10, 2018

Floccinaucinihilipilification என்ற இந்த வார்த்தையின் மூலம் லத்தின் மொழியாகும். இந்த வார்த்தைக்கு குறைந்த விலை அல்லது ஒன்றுக்கும் உதவாதது என்று அர்த்தமாகும்.