Forbes பணக்காரர் பட்டியல்: சல்மான் கான் முதலிடம்; நயன்தாராவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

2018-ம் ஆண்டின் அதிக வருவாய் பெற்ற இந்தியப் பிரபலங்களின் டாப்-100 Forbes பட்டியலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக முதலிடம் பெற்றுள்ளார் நடிகர் சல்மான் கான்.

இந்தியாவில் 2018-ம் ஆண்டு அதிகம் சம்பாதித்த டாப்-100 பிரபலங்களின் Forbes பட்டியலில் 253.25 கோடி ரூபாய் வருவாய் உடன் முதலிடம் பெற்றுள்ளார் பாலிவு நடிகர் சல்மான் கான். இரண்டாம் இடத்தில் 228.09 கோடி ரூபாய் வருவாய் உடன் கிரிக்கெட் வீரர் விராட் கோலி உள்ளார். அடுத்து மூன்றாம் இடத்தில் 185 கோடி ரூபாய் உடன் அக்‌ஷய் குமார் உள்ளார்.டாப்-10 பட்டியலில் வழக்கம் போல் அமீர் கான், அமிதாப் பச்சன், ரன்வீர் சிங், சச்சின் டெண்டுல்கர், அஜய் தேவ்கன் உள்ளனர். இந்த ஆண்டு திரைப்படங்கள் ஏதும் வெளியாகமல் டாப்-2 இடத்திலிருந்து 13-ம் இடத்துக்கு சரிந்துள்ளார் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான். இன்றைய ட்ரெண்டிங் பட்டியலில் உள்ள பிரியங்கா சோப்ரா 7-ம் இடத்திலிருந்து 49-ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

டாப்-100-ல் முதன்முறையாக டாப்-5 இடத்தைக் கைப்பற்றிய முதல் பெண் என்ற பெருமையப் பெற்றுள்ளார் நடிகை தீபிகா படுகோனே. மேலும் நடிகைகள் ஆலியா பட், அனுஷ்கா சர்மா, தாப்ஸி பன்னு, நயன்தாரா மற்றும் பேட்மின்டன் வீராங்கணை பிவி சிந்து ஆகியோரும் டாப் 100 பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இதில் தமிழக லேடி சூப்பர் ஸ்டார் 15.17 கோடி ரூபாய் வருவாய் உடன் 69-வது இடம் பிடித்துள்ளார்.

மேலும் பார்க்க: தெலங்கானாவில் அரசியல்வாதிகளை விரட்டியடிக்கும் 10 கிராம மக்கள்