ஹூன்டாய் சான்ட்ரோ சோதனை ஓட்டம்

ஹூன்டாய் நிறுவனத்தின் புதிய தலைமுறை சான்ட்ரோ விரைவில் இந்தியாவில் வெளியிடப்பட இருக்கிறது.
புதிய ஹூன்டாய் சான்ட்ரோ இந்தியாவில் சோதனை செய்யப்பட்டு வருகிறது.
முழுமையாய் மறைக்கப்பட்டிருக்கும் சான்ட்ரோ வெளியீடு இன்னும் சில மாதங்கள் ஆகும் என்றே தெரிகிறது.
புதிய ஹூன்டாய் சான்ட்ரோ AH2 என்ற குறியீட்டு பெயரில் தயாரிக்கப்பட்டு வருகிறது.
ஹேட்ச்பேக் மாடல் புதிய தளத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
ஹூன்டாய் புதிய சான்ட்ரோ இந்தியாவில் கடந்த சில மாதங்களில் அடிக்கடி இந்திய சாலைகளில் சோதனை செய்யப்பட்டு வருகிறது.
வடிவைப்பை பொருத்த வரை புதிய தலைமுறை சான்ட்ரோ மாடலில் புதிய வடிவமைப்பு மற்றும் கேஸ்கேட் கிரில், புதுவித வடிவமைப்பு கொண்ட பம்ப்பர் உள்ளிட்டவை காரின் தோற்றத்தை மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சான்ட்ரோ என்ட்ரி-லெவல் மாடலில் ஸ்டீல் வீல் மற்றும் கவர்கள், ஹாலோஜென் ஹெட்லைட் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
புதிய ஹூன்டாய் சான்ட்ரோ டாப் எண்ட் மாடலில் பகலில் எரியும் எல்இடி ரன்னிங் லைட் வழங்கப்படும் என்றும் இதன் உள்புறம் அதிக இடவசதி, மற்றும் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாதுகாப்பு அம்சங்களை பொருத்த வரை ஹூன்டாய் சான்ட்ரோ மாடலில் டூயல் ஏர்பேக், ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
புதிய தலைமுறை ஹூன்டாய் சான்ட்ரோ மாடலில் 0.8 லிட்டர் அல்லது 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய சான்ட்ரோ டீசல் வேரியண்ட் தற்சமயம் அறிமுகம் செய்யப்படாது என கூறப்படுகிறது. இந்த இன்ஜின் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.