IB Recruitment Notification: உளவுத்துறையில் வேலை! உடனே அப்ளே பண்ணுங்க

மத்திய போலீஸ் படைப் பிரிவுகளில் ஒன்றான இன்டலிஜென்ஸ் பீரோவில் காலியாக உள்ள 318 பணியடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான விபரம் பின்வருமாறு:

பணி 1: ஜூனியர் இன்டலிஜென்ஸ் ஆபீசர்
கல்வித் தகுதி – 12ம் வகுப்பு தேர்ச்சி
காலி இடங்கள்: 167
சம்பளம்: மாதம் ரூபாய் 25,500 முதல் 81,100 வரை
அனுபவம்: 2-5 வருட பணி அனுபவம்
பணியிடம்: டெல்லி
விண்ணப்பிக்க கடைசி நாள்: 23 ஏப்ரல் 2019

பணி 2: கூடுதல் பாதுகாப்பு அதிகாரி
கல்வித் தகுதி – டிப்ளமோ தேர்ச்சி
காலி இடங்கள்: 12
சம்பளம்: மாதம் ரூபாய் 44,900 முதல் 1,42,400 வரை
அனுபவம்: 5-8 வருட பணி அனுபவம்
பணியிடம்: டெல்லி
விண்ணப்பிக்க கடைசி நாள்: 23 ஏப்ரல் 2019

பணி 3: நேர்முக உதவியாளர்

கல்வித் தகுதி – ஏதாவது ஒரு பட்டபடிப்பு தேர்ச்சி
காலி இடங்கள்: 7
சம்பளம்: மாதம் ரூபாய் 44,900 முதல் 1,42,400 வரை
அனுபவம்: 10-12 வருட பணி அனுபவம்
பணியிடம்: டெல்லி
விண்ணப்பிக்க கடைசி நாள்: 23 ஏப்ரல் 2019
இது தவிர மூத்த ஆராய்ச்சி அதிகாரி, உதவி ஆராய்ச்சியாளர், துணை இயக்குனர், நர்ஸ், கணக்கர், சமையலர் உள்ளிட்ட பணியிடங்களும் உள்ளது.

தேர்ந்தெடுக்கப்படும் முறை
விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் ஏப்ரல் 23ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.

மேற்கண்ட கல்வி தகுதியை தவிர கூடுதல் தகுதிகள் பணிக்கு ஏற்றாற் போல் மாறுபடும். எனவே இது தொடர்பான முழுமையான அதிகாரப்பூர்வ தகவல்களை தெரிந்து கொள்ள
www.mha.nic.in என்ற இணையதள முகவரியை அணுகவும்.

Comments are closed.