கனடாவில் பரிதபம் ஐஸ் ஹாக்கி வீரர்கள் சென்ற பேருந்து விபத்து

கனடா நாட்டில் ஐஸ் ஹாக்கி வீரர்கள் சென்ற பேருந்து எதிரே வந்த டிரக் உடன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கனடா நாட்டில் ஒரு உள்ளூர் ஐஸ் ஹாக்கி போட்டியில் விளையாடுவதற்காக ஒரு ஜுனியர் அணி வீரர்கள் பேருந்தில் சென்றுள்ளனர்.
அவர்கள் சென்ற பேருந்து சாஸ்கட்சேவான் மாகாணத்தின் திஸ்டேல் நகருக்கு அருகில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த டிரக் உடன் நேருக்கு நேர் மோதியது.
இந்த கோர விபத்தில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மூன்று பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்த பேருந்தில் 28 பேர் பயணம் செய்துள்ளனர்.
விளையாட செல்லும் வழியில் பேருந்து விபத்தில் சிக்கி ஹாக்கி வீரர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.