IND v WI T20: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக நாளை விளையாடும் இந்திய அணி அறிவிப்பு

கொல்கத்தா : வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டி20 போட்டி நாளை நடைப்பெற உள்ளது. இதற்காக 12 பேர் அடங்கிய இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா சுற்றுப் பயணம் வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 2 டெஸ்ட், 5 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாட வந்துள்ளது. இரண்டு டெஸ்ட் போட்டியிலும் இந்தியா அபார வெற்றியை பதிவு செய்தது.
அதைத் தொடர்ந்து நடந்த ஒருநாள் தொடரில் இந்தியா 3-1 என தொடரை கைப்பற்றி கோப்பையை வென்றது.

முதல் டி20 :வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 டி20 போட்டிகள் நவம்பர் 4, 6, 11 ஆகிய தேதிகளில் நடைப்பெற உள்ளன.

கோலி, தோனி இல்லை: விராட் கோலிக்கு வெ.இ அணிக்கு எதிரான டி20 போட்டியில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் எம்.எஸ் தோனிக்கு வெ.இ மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 போட்களிலும் என இரண்டிலும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க :
ஆஸி.,க்கு எதிரான டி20 போட்டி: தோனி இல்லாத இந்திய அணி அறிவிப்பு

முன்னதாக 16 வீரர்கள் அடங்கிய இந்திய அணியை பிசிசிஐ அறிவித்திருந்தது. இந்நிலையில் நாளை நடைப்பெற உள்ள போட்டியில் விளையாட உள்ள இந்திய அணியுடன் ஒரே ஒரு வீரர் கூடுதலாக 12 பேர் அடங்கிய வீரர் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

இந்திய அணி விபரம்:ரோஹித் ஷர்மா (கேப்டன்), ஷிகர் தவான், KL ராகுல், தினேஷ் கார்த்திக், மணீஷ் பாண்டே, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), குர்ணால் பாண்டியா, சஹால், குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், பும்ரா, கலீல் அகமது

குர்ணால் பாண்டியாவுக்கு நாளைய டி20 போட்டி மூலம் அறிமுகமாவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

India’s 12 for the 1st T2OI against Windies. #TeamIndia Rohit Sharma (Captain), Shikhar Dhawan, KL Rahul, Rishabh… https://t.co/dwDa5hjHNt— BCCI (@BCCI) 1541248305000
Rohit Sharma (Captain), Shikhar Dhawan, KL Rahul, Rishabh Pant (wk), Manish Pandey, Dinesh Karthik, Krunal Pandya, Kuldeep Yadav, Bhuvneshwar Kumar, Jasprit Bumrah, Khaleel Ahmed, Yuzvendra Chahal