Jasprit Bumrah : இந்தியாவுக்கு மேலும் ஒரு ஆல்-ரவுண்டர் ரெடி? – பும்ராவின் அதிரடி பேட்டிங்கால் நம்பிக்கை

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணிக்கு பும்ரா பவுலிங் பயிற்சி மட்டுமல்லாமல் அதிரடியாக பேட்டிங் செய்யும் பயிற்சியில் ஈடுபட்டுள்ள வீடியோ வெளியாகியுள்ளது.

ஆஸ்திரேலியா சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20, 4 டெஸ்ட் போட்டி, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் டி20 நவம்பர் 21ம் தேதி நடைப்பெற உள்ளது.

இதற்கான வலைப்பயிற்சியில் இந்திய அணி வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இதில் இந்திய அணியின் முன்னனி வேகப்பந்துவீச்சாளர் பும்ரா அதிரடியாக பேட்டிங் செய்யும் வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

பொதுவாக பும்ரா பேட்டிங் செய்யும் போது தான் ஒரு பவுலர் என்ற நினைப்பில் தான் செயல்படுவார். ஆனால் அந்த பயம் விடுத்து இந்த வீடியோவில் பும்ரா பேட்ஸ்மேன் போன்று அதிரடியாக பேட்டிங் செய்வது இந்திய அணிக்கு கூடுதல் நம்பிக்கை கொடுத்துள்ளதோடு, ஒரு ஆல்-ரவுண்டர் கிடைத்தது போன்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது.

That moment at the nets when @Jaspritbumrah93 went Hammer and Tongs #TeamIndia https://t.co/mWLIlGYHby— BCCI (@BCCI) 1542616268000

India vs Australia: Jasprit Bumrah produced some lusty blows while batting in the nets in Gaba ahead of the T20I opener between India and Australia.